
கீரை விதையுடன் கூடிய, களிமண்ணாலான விநாயகர் சிலைகளை, பள்ளி மாணவ -
மாணவியர் செய்து அசத்தினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பத்தலப்பள்ளி
பகுதியில், டி.வி.எஸ்., அகாடமி பள்ளி உள்ளது.இங்கு, ஒன்று முதல் 10ம்
வகுப்பு வரை, படித்து வரும் மாணவ - மாணவியர் கடந்த இரு ஆண்டுகளாக, நீர்
நிலைகளுக்கு பாதிப்பில்லாத களிமண்ணாலான விநாயகர் சிலைகள் செய்து
வருகின்றனர். இன்று, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில்,
500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பல்வேறு குழுக்களாக பிரிந்து, நேற்று
காலை விநாயகர் சிலைகளை செய்தனர்.
அப்போது, களிமண்ணுடன், தண்டுக்கீரை,
முளைக்கீரை, வெந்தயக்கீரை, கொத்தமல்லி விதைகளை வைத்து, விநாயகர் சிலைகள்
செய்யப்பட்டன.அவற்றை, மாணவ - மாணவியர், அவரவர் வீட்டுக்கு கொண்டு சென்று,
பூஜை செய்து தண்ணீரில் கரைத்து, பராமரித்தால் கீரை முளைக்கத் துவங்கும் என,
ஆசிரியர்கள் தெரிவித்தனர்.