பள்ளி,
கல்லுாரிகளில் இன்று, 'துாய்மையே சேவை' தினம், கடைபிடிக்க
உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின், 'துாய்மை பாரதம்'
திட்டம், ஒவ்வொரு ஆண்டும், இரண்டு வாரங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த
ஆண்டு, செப்., 1ல், துாய்மை பாரதம் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
துவங்கின. பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில்,
துாய்மையை பேணுவதற்கான, நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், துாய்மை பாரத திட்டத்தின், விழிப்புணர்வு நடவடிக்கையில், இன்று, துாய்மையே சேவை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக, 'ஒவ்வொரு பள்ளி, கல்லுாரியிலும், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், அந்தந்த பகுதிகளில், விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும்.'கை கழுவுதல் மற்றும் சோப் பயன்படுத்தி, சுத்தம் செய்வதன் முக்கியத்துவத்தை, பொது மக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.