தமிழகத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில்
நடைபெறவுள்ள பத்தாம் வகுப்புத் துணைத் தேர்வுக்கு
விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் சனிக்கிழமை பிற்பகல் முதல்
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அறிவியல் பாடத்துக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், அந்தந்த மாவட்டக்
கல்வி அலுவலர்களால் செவ்வாய்க்கிழமை (செப்.18) முதல் வியாழக்கிழமை
(செப்.20) வரை நடத்தப்படும் பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத்
தேர்வை எழுத வேண்டும். மேலும் இந்தத் தேர்வர்கள், தேர்வுக்கு முன்கூட்டியே
செய்முறைத் தேர்வு நடத்தப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களை தொடர்புடைய
மாவட்டக் கல்வி அலுவலர்களை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளுமாறு
அறிவுறுத்தப்படுகிறார்கள் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது