
மேலும், அவர்களில் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் எதிர்கால சேமிப்பு என்ற
அடிப்படையில் வீட்டு வசதி திட்டங்களில் முதலீடு செய்வதிலும் ஆர்வமாக
இருக்கிறார்கள் என்று ரியல் எஸ்டேட் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் ஹைதராபாத் நகரத்தில் நடந்த கிரெடாய் (Confederation of Real
Estate Developers Association of India - CREDAI) அமைப்பின் இளைஞர்
மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட
இளைய தலைமுறையினர் தங்கள் விருப்பப்படி சொந்த வீடு வாங்கும் முடிவுடனும்,
20 சதவிகிதம் பேர் ரியல் எஸ்டேட் சந்தையில் வர்த்தக ரீதியாக முதலீடு
செய்யும் முடிவுடன் இருப்பது அறியப்பட்டுள்ளது.
கிரெடாய் மற்றும் சி.பி.ஆர்.இ (புது டில்லியை மையமாக கொண்டு செயல்பட்டு
வரும் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ரியல் எஸ்டேட் சந்தை
ஆய்வு நிறுவனம்-சிஙிஸிணி) கூட்டாக வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில்,
2020 ஆண்டுக்குள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம்
பேர் இளைஞர்களாக இருப்பார் கள் என்ற கூடுதல் தகவலும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரங்களில் நிலவும் வாழ்க்கைக்கான சூழலை ஆண்டு தோறும் மதிப்பீடு செய்ய
மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக,
நகர அமைப்பு, சமூக நிலை, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட
பிரிவுகளின் கீழ் இந்த மதிப்பீடு, இந்திய அளவில் 100-க்கும் மேற்பட்ட
நகரங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேற்கண்ட செயல்பாடுகளுக்கு ஏற்ப மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில்
நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி துறைக்கான ஒதுக்கீடு
அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2017-2018-ம் ஆண்டுக்கான நிதிநிலை
அறிக்கையில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி துறைக்கு
ஒதுக்கப்பட்ட நிதியை (ரூ.40,617 கோடி) விடவும், 2018-19-ம் ஆண்டுக்கான
அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி (ரூ.41, 765 கோடி) அதிகம் என்பது
கவனிக்கத்தக்கது.
மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடும் இந்த ஆண்டில்
கிட்டத்தட்ட 50 சதவிகிதத்துக்கும் மேல் அரசு அதிகப்படுத்தி
அறிவித்துள்ளதாகவும் மத்திய வீட்டுவசதித் துறை தெரிவித்துள்ளது.