பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.11.18 : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.11.18 :


திருக்குறள்


அதிகாரம்:இனியவை கூறல்

திருக்குறள்:95

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

விளக்கம்:

அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.

பழமொழி

What you sow that your reap

வினை விதைத்தவன் வினையறுப்பான்; தினை விதைத்தவன் தினையறுப்பான்.

இரண்டொழுக்க பண்பாடு

* விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களை துன்புறுத்த மாட்டேன்.

* பாரதியாரின் கூற்றுப்படி எல்லா உயிரிகளிடத்திலும் அன்பு செலுத்துவேன்

 பொன்மொழி

படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  - காமராஜர்

பொது அறிவு

1.சார்மினார் அமைந்துள்ள இடம் எது?

 ஹைதராபாத்

2. சார்மினார் என்ற உருது  சொல்லின் பொருள் என்ன?

 நான்கு கோபுரங்கள்

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

ஏலக்காய்

1.ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா நோயாளி களுக்கும் ஏற்றது. சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு உள்ளது.

2. வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் இந்த தொல்லை ஏதும் ஏற்படாது.

3. ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.

English words and meaning

Astute.     தந்நிரமுள்ள
Astir          அசைகிற
Avow.         ஒப்புக்கொள்
Ambit.        வரம்பு
Ailments.  நோய்.

அறிவியல் விந்தைகள்

காகம்
* கரிய நிறம் கொண்ட நான் கார்விடே குடும்பத்தைச் சேர்ந்தவன்
* மயில் போல நாங்கள் அழகாய் இல்லாவிட்டாலும் குயில் போன்ற குரல் இல்லாவிட்டாலும் நாங்கள் குணத்திலும் அறிவிலும் உயர்ந்தவர்கள்
* நீங்கள் தெருவில போடும் அழுகிய பொருட்களை உண்டு சுத்தம் செய்வதும் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பொது மொழிக்கு இலக்கணம் நாங்களே.

நீதிக்கதை

பேருதவி

ஒரு தடவை முல்லா ஒரு குளக்கரை ஒரமாக நடந்து சென்று கொண்டிரு ந்தார்.

அப்போது வழியில் இருந்த ஒரு கல் தடுக்கி குளத்தில் விழ அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு மனிதர் பாய்ந்து வந்து முல்லாவைக் குளத்தில் விழாமல் காப்பாற்றினார்.

முல்லா அவருக்கு நன்றி சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ஆனால் முல்லாவைக் காப்பாற்றியவரோ சும்மா இருக்கவில்லை. முல்லாவை எந்த இடத்தில் யாருக்கு நடுவே சந்தித்தாலும் குளத்தில் விழ இருந்த முல்லாவை நான்தான் காப்பாற்றினேன் என்று சொல்ல தொடங்கிவிட்டார்.

அவருடைய தற்பெருமைப் பேச்சைக் கேட்டுக் கேட்டு முல்லாவுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது. அவருக்கு தகுந்த நேரத்தில் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.

ஒரு நாள் பழைய குளக்கரைப் பக்கம் ஜன நடமாட்டம் அதிகமாக இருந்தது. அந்தப் பக்கம் வந்த முல்லா அந்த தற்பெருமைக்காரர் குளக்கரையில் யாரோ ஒருவருடன் உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

திடீரென முல்லா குளத்தினுள் பாய்ந்து விட்டார்.

முல்லா குளத்தில் விழுந்து விட்டார் என நாலாபுறமிருந்த மக்களிடமிருந்து கூக்குரல் எழுந்தன.

பலர் முல்லாவைக் காப்பாற்றுவதற்காக குறத்தில் இறங்கினர்.

முன்னர் முல்லாவைக் குளத்தில் விழாமல் காப்பாற்றியவரும் அவசர அவசரமாகக் குளத்தில் இறங்கினார்.

முல்லாவோ யாரைப் பற்றியும் கவலைப்படாமல் குளத்தில் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தார்.

முல்லாவுக்கு நீந்தத் தெரியும் என்ற விஷயம் இதுவரை யாருக்கமே தெரியாது.

முல்லா முன்னர் தம்மைக் காப்பாற்றியதாக தற்பெருமை பேசும் மனிதரைச் சுட்டிக் காண்பித்து என் அருமை நண்பரை உங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்த நினைக்கிறேன். நீந்தத் தெரிந்த என்னை இந்தக் கனவான் ஒரு தடவை நீரில் மூழ்கி விடாமல் காப்பாற்றி பேருதவி செய்தார் என்றார்.

நீதி : உதவி செய்ததை எல்லோரிடமும் சொல்லி பரப்ப கூடாது.. அடுத்தவரை குறைவாக மதிப்பிட்டு தற்பெருமை கொள்ள கூடாது.

இன்றைய செய்திகள்

12.11.18

* வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 15 ஆம் தேதி கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும்போது, தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

* தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற குரூப்-2 எழுத்து தேர்வில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

* லோக்சபா' தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதால், தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர் விவரங்களை சேகரித்து, 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

* மல்யுத்தம் ஆடவர் 65 கிலோ பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரர் என்ற நிலையை எட்டியுள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீரர் பஜ்ரங் புனியா.

* மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி இலக்கான 182 ரன்களை பரப்பரப்பான ஆட்டத்தில் எட்டி தொடரை வென்றது இந்திய அணி.

Today's Headlines

🌻The Indian Meteorological Survey has issued Red Alert because of the heavy rainfall in some parts of Tamil Nadu, when the Ghaja storm, which originated in the Bank of Bengal, crosses the coast at about 90 km between Cuddalore and Sriharikota.

🌻More than 6 lakh people participated in the Group-II exam held yesterday in Tamil Nadu.

🌻The Election Commission has ordered to collect the details of the workforce and submit it by 20th

🌻India's star player Bajrang Punia is the world's number one wrestler in the 65kg category.

* The Indian team wins the 182-run  in the third T20 match against West Indies and also won the tournament too.

Prepared by
Covai women ICT_போதிமரம்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H