கூடலூரை அடுத்துள்ள தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்
பள்ளியில், அனைவரையும் கவரும் விதமாக புதுமையான முறையில் குழந்தைகள் தின
விழா புதன்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்திலுள்ள தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு
உறைவிட நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவுக்கு தலைமை
ஆசிரியர் சமுத்திர பாண்டியன் தலைமை வகித்தார்.
பழங்குடியின மாணவர்களுக்கு தலைமைப் பண்பை வளர்க்கும் முகமாக, 8-ஆம் வகுப்பு
மாணவர் பரத் ஒரு நாள் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார். தலைமை
ஆசிரியர் இருக்கையில் அமர்ந்து பணிகளை மேற்கொண்டார். தலைமை ஆசிரியர்
உள்ளிட்ட இதர ஆசிரியர்கள், பணியாளர்கள் அவர் முன்பு வருகைப் பதிவேட்டில்
கையெழுத்திட்டனர்.
தொடர்ந்து, ஆசிரியர்களை வகுப்பறையில் அமரவைத்து மாணவர்கள் பாடம் நடத்தினர்.
மாணவர்களின் இருக்கைகளில் அமர்ந்து ஆசிரியர்கள் பாடங்களைக் கவனித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாணவர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. மாணவர்களின் தலைமைப் பண்பை வளர்க்க
இதுபோன்ற ஏற்பாடுகளைச் செய்ததாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
ஆசிரியர்களை மாணவர்களின் இருக்கையில் அமரவைத்து பாடம் நடத்தும் மாணவி அஜிதா
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...