24 வயதாகும் அவனி சதுர்வேதி முதல் இந்திய பெண் போர் விமானி என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் அவர் `மிக்- 21 பைசன்`(Mig-21 Bison)என்ற போர் விமானத்தை தனியாகி ஓட்டி சாதனை படைத்துள்ளார்.
இது பெண்களுக்கான தடைகளை உடைத்து சாதனை படைப்பது போன்றது என்று பிபிசியிடம்
தெரிவித்தார் விமானப்படையின் செய்தி தொடர்பாளர் அனுபம் பேனர்ஜி.
நாட்டின் ஆயுதப் படை வரலாற்றில் இது "மிக முக்கியமான நாள்" என்றும் அவர் கூறுகிறார்.
இந்திய விமானப்படையில் சமீபமாக சேர்ந்த மூன்று பெண்களில் சதுர்வேதியும் ஒருவர்.
விமானத்தை செலுத்திய பிறகு அதன் அருகில் அவனி இருப்பது போன்ற புகைப்படத்தை
இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி அவர் இந்த சாதனையை
படைத்துள்ளார் ஆனால் விமானப்படை இந்த செய்தியை வியாழனன்று
வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் விமானப் படையில் 20 பெண் போர் விமானிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...