குழந்தைகள் தினம்: பள்ளிகளுக்கு இலவச DVD வழங்கும் திட்டம் - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Breaking News

Post Top Ad

Thursday, 8 November 2018

குழந்தைகள் தினம்: பள்ளிகளுக்கு இலவச DVD வழங்கும் திட்டம்

குழந்தைகள் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, பள்ளிகளுக்கு இலவச டி.வி.டி. வழங்கும் திட்டத்தை குழந்தைகளுக்கான இந்திய திரைப்பட சமூகம் (சி.எஃப்.எஸ்.ஐ.) அறிவித்துள்ளது.
 இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
 மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் சிஎஃப்எஸ்ஐ, குழந்தைகளுக்கான பிரத்யேக திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது. இந்தத் திரைப்படங்கள் பொழுதுபோக்கு மட்டுமின்றி இளம் மனங்களில், நீதி போதனைகளை வளர்ப்பதற்கும் உதவுகின்றன.
 குழந்தைகள் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, பள்ளிகளில் குழந்தைகள் தொடர்பான திரைப்படங்களை திரையிட வசதியாக இலவச டி.வி.டி.-க்களை சி.எஃப்.எஸ்.ஐ. வழங்கவுள்ளது. விருப்பமுள்ள பள்ளிகள் 044 -2498 1159 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad