விமான பயணங்களில் பாதி டேங்க் பெட்ரோல் காலி ஆகிற வரை "Safe zone". அதற்கு அப்புறமா மீண்டும் கிளம்பின இடத்துக்கு வர முடியாது. எதுக்காக கிளம்பினோமோ அதை நோக்கி தான் போகனும். அதை, "Point of No Return"ன்னு சொல்வாங்க. இந்த "திரும்ப முடியாத இடத்தை", நம்ம வாழ்க்கையில எப்போ எல்லாம் சந்திச்சிருக்கோம்...?
இந்த மாதிரி சவால்கள் தான் வாழ்க்கையை சுவாரஸியமாக்குது இல்லியா??
இன்னிக்கு நன்றி அறிவிப்பு தினம். கொடைக்கானல் ரேடியோவில் யாருக்கு நன்றி சொல்ல போறீங்கன்னு கேட்டு ஒரு நேரடி நிகழ்ச்சி. ஒருத்தர் தொலைபேசியில அவரோட அத்தனை சொந்தங்களையும் பட்டியலிட்டு அனைவருக்கும் நன்றி சொன்னார். சொல்லிட்டு, "டேய் நீங்க எவனாவது எனக்கு அன்னிக்கு 100 ரூ குடுத்து உதவியிருந்தா நான் உருப்பட்டிருக்க மாட்டேன்டா. எவனுமே குடுக்காததுக்கு நன்றி டா. உங்களால தான் என்னோட திறமையை நான் கண்டு பிடிக்க முடிஞ்சது.. நான் நல்லாருக்கேன். நன்றி டான்னு" முடிச்சார்.
சிரிச்சுட்டே யோசிச்சா... அது தான் அவரோட 'The Edge of the Cliff'. அங்க இருந்து தான் அவரோட 'Point of No Return' ஆரம்பிக்குது. ஒரு ஃபீனிக்ஸ் பறவையா நம்முடைய கஷ்டங்கள், தோல்விகள் எல்லாத்தையும் உதறிட்டு புது மனுஷனா எழுந்து நிக்கிறதுக்கான உத்வேகம், பிரச்சனைகளிலும் தோல்வியிலும் தான் கிடைக்குதுன்னு நினைக்கிறேன்.
எதிர்பாராமல் வரும் பிரச்சனைகள், அதனால் ஏற்படும் வீழ்ச்சி யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படும். வீழும் இடத்தில் இருந்து எவ்வளவு நேர்த்தியா எழுந்து நிற்கிறோம் என்பது தான் வாழ்க்கைக்கே அர்த்தம் குடுக்குது. திட்டமிட்டபடி போகும் வாழ்க்கையில் ஒரு வகை நிம்மதி இருக்கு தான். சிலருக்கு அது தான் சரி. ஆனால் வேறு சிலருக்கோ நிம்மதியை விட திருப்தி தேவைப்படுது.
சவால்களும் அதை முறியடிக்கும் வெற்றியும் தான் திருப்தியை குடுக்கும். போராட்ட குணமுள்ளவனுக்கு Edge of the Cliff என்பது மற்றுமொரு துவக்கமே. நீங்க சந்திச்ச Point of No Return ஐ நினைச்சு பாருங்க... உங்களை Edge of the Cliff'க்கு தள்ளிய அனைவருக்கும் நன்றி சொல்லுங்கள்.... ஒரு வகையில் உங்கள் வெற்றிக்கு அவங்க தான் காரணமே...
😄😄😄😄😄








