வரலாற்றில் இன்று 04-12-2018: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


வரலாற்றில் இன்று 04-12-2018:


டிசம்பர் 4 (December 4) கிரிகோரியன் ஆண்டின் 338 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 339 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 27 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1259 – பிரான்சின் ஒன்பதாம் லூயி, இங்கிலாந்தின் மூன்றாம் என்றி ஆகியோர் பாரிசில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, நார்மண்டி உட்பட ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு இங்கிலாந்து உரிமை கோருவதில்லை எனவும் ஆங்கிலேயப் புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது.
1619 – 38 குடியேறிகள் வர்ஜீனியாவின் பெர்க்லியில் தரையிறங்கினர்.
1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
1791 – உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி அப்சர்வர் வெளிவந்தது.
1829 – ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த வங்காளத்தில் உடன்கட்டை ஏறல் முறையை ஒழிக்கும் சட்டத்தை தலைமை ஆளுநர் வில்லியம் பென்டிங்கு பிரபு கொண்டு வந்தார்.
1865 – வட கரொலைனா, ஜார்ஜியா ஆகிய அமெரிக்க மாநிலங்கள் இரு வாரங்களில் அடிமைகள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என அறிவித்தன.
1918 – முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அரசுத்தலைவர் ஊட்ரோ வில்சன் பிரான்சு சென்றார். பதவியில் உள்ள அமெரிக்கத் தலைவர் ஒருவர் ஐரோப்பா சென்றது இதுவே முதற் தடவையாகும்.
1939 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியக் கப்பல் நெல்சன் இசுக்காட்லாந்து கரையில் கண்ணி வெடியில் சிக்கி சேதமடைந்தது.
1943 – இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியாவின் எதிர்ப்புத் தலைவர் யோசிப் டீட்டோ "சனநாயக யூகொசுலாவிய அரசு" ஒன்றை தற்காலிகமாக அமைத்தார்.
1945 – ஐக்கிய அமெரிக்கா ஐநாவில் இணைவதற்கு ஒப்புதல் அளித்து செனட் அவை வாக்களித்தது.
1957 – ஐக்கிய இராச்சியத்தில் லூவிசாம் என்னுமிடத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 92 பேர் உயிரிழந்தனர்.
1958 – பிரெஞ்சு அதிகாரத்தின் கீழ் பெனின் சுயாட்சி உரிமை பெற்றது.
1959 – ஐக்கிய அமெரிக்காவின் மேர்க்குரித் திட்டத்தின் கீழ் சாம் என்ற குரங்கு 55 மைல்கள் உயரம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகப் பூமி திரும்பியது.
1967 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா, மற்றும் தெற்கு வியட்நாமியப் படைகள் மேக்கொங் டெல்ட்டா பகுதியில் வியட் கொங் படைகளுடன் மோதின.
1971 – இந்தியக் கடற்படை பாக்கித்தானியக் கடற்படையையும் கராச்சியையும் தாக்கியது.
1971 – பாக்கித்தான் கடற்படைக்குச் சொந்தமான காசி என்ற நீர்மூழ்கிக் கப்பல் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.
1971 – இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமையை ஆராய ஐநா பாதுகாப்பு அவை அவசரமாகக் கூடியது.
1977 – மலேசியா எயர்லைன்சு வானூர்தி 653 கடத்தப்பட்டு ஜொகூரில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 100 பேர் உயிரிழந்தனர்.
1984 – குவைத் விமானம் ஒன்றை ஹெஸ்புல்லா அமைப்பினர் கடத்தியதில் நான்கு பயணிகள் கொல்லப்பட்டனர்.
1984 – 1984 மன்னார் படுகொலைகள்: இலங்கைப் படையினர் மன்னாரில் 107-150 பொதுமக்களை படுகொலை செய்தனர்.
1991 – டெரி ஆண்டர்சன் என்ற அமெரிக்க ஊடகவியலாளர் கடத்தப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பின்னர் பெய்ரூட்டில் விடுவிக்கப்பட்டார்.
1991 – ஐக்கிய அமெரிக்காவின் பான் ஆம் விமான சேவை தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.
1992 – அமெரிக்கா சோமாலியாவுக்கு 28,000 அமெரிக்கப் படைவீரர்களை அனுப்ப அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் உத்தரவிட்டார்.
2005 – ஆங்காங்கில் பல்லாயிரக்கணக்கானோர் மக்களாட்சி வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிறப்புகள்

1866 – வசீலி கண்டீன்ஸ்கி, உருசிய-செருமானிய ஓவியர் (இ. 1944)
1875 – ரெய்னர் மரியா ரில்கே, ஆத்திரிய-சுவிட்சர்லாந்து கவிஞர் (இ. 1926)
1888 – ரமேஷ் சந்திர மஜும்தார், இந்திய வரலாற்று அறிஞர் (இ. 1980)
1889 – நீலகண்ட பிரம்மச்சாரி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1978)
1892 – பிரான்சிஸ்கோ பிராங்கோ, எசுப்பானியாவின் பிரதமர் (இ. 1975)
1893 – ஹச். பி. அரி கௌடர், இந்திய அரசியல்வாதி (இ. 1971)
1898 – க. சீ. கிருட்டிணன், இந்திய இயற்பியலாளர் (இ. 1961)
1910 – ரா. வெங்கட்ராமன், 6வது இந்தியக் குடியரசுத் தலைவர் (இ. 2009)
1919 – ஐ. கே. குஜரால், 12வது இந்தியப் பிரதமர் (இ. 2012)
1922 – கண்டசாலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (இ. 1974)
1925 – ஆல்பர்ட் பாண்டுரா, கனடிய-அமெரிக்க உளவியலாளர்
1930 – கமுகறை புருஷோத்தமன் நாயர், மலையாளப் பின்னணிப் பாடகர் (இ. 1995)
1949 – ஜெப் பிரிட்ஜஸ், அமெரிக்க நடிகர்
1949 – எஸ். இராமச்சந்திரன், இலங்கை மெல்லிசை, பொப் இசைப் பாடகர்
1963 – செர்கய் புப்கா, உக்ரைனிய தடியூண்டித் தாண்டும் வீரர்
1964 – மரிசா டோமீய், அமெரிக்க நடிகை
1969 – ஜெய்-சி, அமெரிக்க ராப் இசைக்கலைஞர்
1974 – அனுபமா குமார், தமிழகத் திரைப்பட நடிகை
1979 – சமஸ், தமிழகப் பத்திரிகையாளர், எழுத்தாளர்
1982 – நிக் வோய்ச்சிச், ஆத்திரேலிய மதப்போதகர்
இறப்புகள் தொகு
கிமு 530 – சைரசு, பாரசீக மன்னர் (பி. கிமு 600)
749 – தமாஸ்கஸ் நகர யோவான், சிரிய மதகுரு, புனிதர் (பி. 676)
1131 – ஓமர் கய்யாம், பாரசீகக் கவிஞர், வானியலாளர் (பி. 1048)
1576 – இரேடிக்கசு, ஆத்திரிய-சிலோவாக்கிய கணிதவியலாளர், நிலவைரையாளர் (பி. 1514)
1679 – தாமசு ஆபிசு, ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1588)
1850 – வில்லியம் ஸ்டர்ஜியன், மின்சார இயக்கியைக் கண்டுபிடித்த ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1783)
1953 – அ. வேங்கடாசலம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (பி. 1886)
1976 – ந. பிச்சமூர்த்தி, தமிழக எழுத்தாளர் (பி. 1900)
2009 – விச்சிசுலாவ் தீகனொவ், சோவியத், உருசிய திரைப்பட, தொலைக்காட்சி நடிகர் (பி. 1928)
2014 – வி. ஆர். கிருஷ்ணய்யர், இந்திய நீதிபதி, அரசியல்வாதி (பி. 1914)
2015 – மசூர் மௌலானா, இலங்கை அரசியல்வாதி (பி 1932)
2017 – சசி கபூர், இந்திய நடிகர் (பி. 1938)

சிறப்பு நாள்

கடற்படையினர் தினம் - (இந்தியா)

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H