வடகிழக்கு பருவமழையின் தீவிரம், நவம்பர், 23க்கு பின், குறைந்து காணப்படுகிறது. இதனால், ஒரு வாரத்துக்கும் மேலாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், மழை பெரிய அளவில் பெய்யவில்லை. இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை, 112 சதவீதம் பெய்யும் என, கணிக்கப்பட்ட நிலையில், இதுவரை, 40 சதவீதத்துக்கும் குறைவாகவே பெய்துள்ளது. இதனால், வட மாவட்டங்களில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமோ என, மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், 'நாளை முதல், மூன்று நாட்களுக்கு, வடக்கு கடலோர மாவட்டங்களில், பரவலாக மிதமான மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள், சென்னை மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களின் சில இடங்களில்,
சென்னை வானிலை மையத்தின், மாவட்ட வாரியான முன் கணிப்பின்படி, திருவள்ளூர், விழுப்புரம், கடலுார் மற்றும் புதுச்சேரியில், இன்று அதிக மழை பெய்யும்.
'திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் அதை ஒட்டி உள்ள, சென்னையின் சில பகுதிகள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், இடைவெளி விட்டு, இரண்டு நாட்கள் மழை பெய்யும்' என, தனியார் வானிலை யாளர்கள் கணித்துஉள்ளனர்.
நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் எந்த இடத்திலும், 1 செ.மீ., கூட மழை பதிவாகவில்லை. சென்னை, வேலுார், சேலம், கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்களில் மிதமாகவும், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகமாகவும் வெயில் கொளுத்தியது. மாலையிலும், அதிகாலையிலும், குளிர்பனி நிலவியது.








