துணைவேந்தர்கள் தேர்வுக்கு ஊழல் இல்லாத தேடல் குழு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


துணைவேந்தர்கள் தேர்வுக்கு ஊழல் இல்லாத தேடல் குழு:

ஐந்து பல்கலை கழகங்களுக்கு, புதிய துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான தேடல் குழுக்களில், திறமையான, நடுநிலையான கல்வியாளர்களை, கவர்னர் நியமிக்க வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்துள்ளது.பல்கலைகளுக்கு துணைவேந்தர்களை நியமிக்க, கவர்னர் சார்பில் தேடல் குழு அமைக்கப்படும். இந்த குழுவில், சிண்டிகேட் தரப்பில் ஒரு உறுப்பினர், அரசு பிரதிநிதி மற்றும் கவர்னர் பிரதிநிதி என, மூன்று பேர் இடம் பெறுவர். தேடல் குழு உறுப்பினர் கள் மீதே, சில ஆண்டுகளாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. தேடல் குழுவால், சரியான நபர்கள் தேர்வு செய்யப்படுவது இல்லை என்ற, குற்றச்சாட்டும் உள்ளது.முடிகிறதுஇந்நிலையில், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார், கொடைக்கானல் தெரசா, வேலுார் திருவள்ளுவர், சென்னை ஆசிரியர் கல்வியியல் பல்கலை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை என, ஐந்து பல்கலைகளின் துணைவேந்தர் பணியிடங்கள், நான்கு மாதங்களில் காலியாக உள்ளன.
தற்போதைய துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.இந்த பல்கலைகளுக்கு, புதிய துணைவேந்தர்களை நியமனம் செய்ய, தேடல் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த குழுக்களில், நேர்மையான, திறமையான, நடுநிலையான கல்வியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.கடந்த காலங்களில், அமைச்சர்கள், அரசியல் வாதிகளின் சிபாரிசு பெற்றவர்கள், அரசியல் சார்புள்ள உயர்கல்வி துறையினர், தேடல் குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அரசு பிரதிநிதிஅரசு தரப்பு பிரதிநிதியாக யாரை நியமித்தாலும், அதை, கவர்னர் அலுவலகம் ஏற்று கொள்கிறது.கவர்னர் அலுவலக செயலர், துணை செயலர் கள் பரிந்துரைக்கும் நபர்கள், கவர்னர் தரப்பு பிரதிநிதியாக தேடல் குழுக்களில் இடம் பெறுகின்றனர். பெரும்பாலும், அரசியல்வாதிகளின் மறைமுக செல்வாக்கு பெற்றவர்கள், கவர்னர் அலுவலக அதிகாரிகள் வழியாக பரிந்துரைக்கப்பட வாய்ப்புள்ளது.அதேபோல, சிண்டிகேட் உறுப்பினர்களில் பெரும்பாலானோர், அரசு அதிகாரிகளாகவும், அரசின் நியமன உறுப்பினர்களாகவும் இருப்பதால், சிண்டிகேட் சார்பிலும், அரசியல் செல்வாக்கு பெற்றவர்களே இடம் பெறுகின்றனர்.வழக்குகடந்த காலங்களில், தேடல் குழுக்களின் உறுப்பினர்கள் மீது, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேடல் குழுக்களால், சரியான நபர்கள் தேர்வு செய்யப்படுவது இல்லை என்பதும், மதுரை காமராஜர் பல்கலை மற்றும் பாரதியார் பல்கலையின் துணைவேந்தர் பதவி நீக்க விவகாரங்களால் நிரூபிக்கப்பட்டுஉள்ளது.எனவே, தற்போது காலியாக உள்ள, ஐந்து பல்கலைகளின் துணைவேந்தர்களின் நியமனத்திலாவது, அரசியல் பின்புலம், அதிகார செல்வாக்கு இல்லாதவர்களை, தேடல் குழுக்களில் நியமிக்க வேண்டும் என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேரடியாக தலையிட்டு, ஊழல் இல்லாத தேடல் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H