அக்கூட்டணி மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாவட்டத் தலைவர் ராம்ராஜ் தலைமை வகித்தார். ஆலோசகர் அந்தோணிச்சாமி முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் ஜோசப்சேவியர் பேசியதாவது:கல்வியாண்டு துவக்கம், இடையில் ஆசிரியர்கள் ஓய்வுபெற்றால் மாணவர்களின் நலன் கருதி பணிநீடிப்பு வழங்கப்பட்டது.
ஒரே தலைமைஆசிரியர் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கவனிப்பது சிரமம். இதனால் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்படுவர்.ஏற்கனவே நீட் தேர்வை எதிர்கொள்ள மேல்நிலைக் கல்விக்கென தனியாக துறை ஏற்படுத்த வலியுறுத்திவருகின்றனர்.
அந்த சூழ்நிலையில் பள்ளிகளை இணைப்பது மாணவர்களை நலனை பாதிக்கும், என்றார்.மாவட்ட பொருளாளர் பாண்டியராஜன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் அய்யாச்சி, சாமுவேல், செயலாளர்கள் ஜஸ்டின்திரவியம், சுரேஷ், நாகராஜ், நிர்வாகிகள் பெரியசாமி, மாசானம் பங்கேற்றனர்.








