'இயற்கை மருத்துவத்தில், தமிழகத்தை விட, கேரளா வளர்ச்சியடைந்துள்ளது,'' என,
கவர்னர், புரோஹித் பேசினார்.சித்த மருத்துவ தினம், சென்னை கலைவானர்
அரங்கில் நேற்று,கொண்டாடப்பட்டது.விழாவில், தமிழக கவர்னர், பன்வாரிலால்
புரோஹித் பேசியதாவது:இயற்கை முறை மருத்துவத்திற்கு, இந்தியா, இலங்கை,
சிங்கப்பூர், மலேஷியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.
சித்தா உள்ளிட்ட இயற்கை மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு, வருங்
காலங்களில், வெளிநாடுகளில் பணியாற்றும் வாய்ப்பு அதிகம் உள்ளது.இயற்கை
மருத்துவத்தில், தமிழகத்தை விட, கேரளா வளர்ச்சியடைந்துள்ளது. இவ்வாறு அவர்
பேசினார்.மத்திய ஆயுஷ் துறை அமைச்சர், ஸ்ரீபாத் யசோ நாயக்
பேசியதாவது:வாழ்க்கை முறையால் ஏற்படும் பிரச்னைகள் அதிகம். இவற்றை ஆயுஷ்
மருத்துவத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர் பேசினார்