கடந்த சில நாட்களாக தொடர்ந்து சமூக வலை தளங்களில் ஆசிரியர் பெருமக்களை அவதூறாக பேசிய பேச்சுக்களை கேட்டு மனம் வேதனையுற்றதால் இந்த பதிவு...
படித்தவன் அல்லது அறிவுடையவன் எவனும் உங்களை தவறாக பேசவில்லை. படிப்பறிவு இல்லாத, அரசு வேலைக்கு போக வக்கற்றவர்கள் காழ்ப்புணர்ச்சியில் பேசுகிறார்கள். தகுதி தேர்வுக்கு தங்களை தகுதி படுத்திக்கொள்ள முடியாத தறுதலைகள் தான் பேசுகிறார்கள்.
எல்லாப் பணிகளிலும் நன்றாக வேலை செய்பவர்களும் இருப்பார்கள், மனசாட்சிபடி உண்மையாக உழைப்பவர்களும் இருப்பார்கள், ஒரு சில பேர்கள் சரியில்லை என்பதற்காக ஒட்டு மொத்தமாக அனைவரையும் தவறாக பேச கூடாது.
இதன் விளைவாக இனி உண்மையாக உழைக்கும் ஆசிரியர்களுக்கு கூட என்ன செய்தாலும் நம்மை இப்படி தான் பேசுவார்கள் என்ற எண்ணம் வரும். இது மக்கள் கொள்ளி கட்டையால் தங்கள் தலையை தாங்களே சொரிந்தது போல் ஆயிற்று.
அரசு ஊழியர்கள்/ஆசிரியர்கள் கோரிக்கைகள் நியாயமானதாக இருக்கலாம் ஆனால் நீங்கள் முன்வைத்தது முட்டாள்களிடத்தில்....
அதை ஆராயும் அறிவு அவர்களிடத்தில் இல்லை என்பது தான் உண்மை.
உங்களுக்கு நிகராக படித்து தகுதி அடிப்படையில் அவர்கள் பணிக்கு வந்திருந்தால் உங்கள் கோரிக்கையை புரிந்துகொள்ள முடியும். அவர்கள் கேவலம் பெண்ணின் காலை பிடித்தும், மண்டியிட்டும் பதவிக்கு வந்தவர்கள்.
போராடும் போது கூட உங்களுக்கு நிகரானவர்களோடு போராட வேண்டாமா......
இதில் சில ஊடகங்கள் கல்வியாளர்களை கேள்வி கேட்கின்றனர். ஆயிரம் பேர் ஆயிரம் பேசினாலும் நம்மில் ஒவ்வொருவருக்கும் அடிமனதில் நம்முடைய ஆசிரியர்கள் நீக்கமற நிறைந்திருப்பார்கள். ஒவ்வொருவர் நினைவிலும் அந்த ஆசிரியரால் தான் நான் பாஸானேன், அவர் சொல்லி கொடுத்த பாடம் இது, அந்த ஆசிரியர் கூறிய அறிவுரை இது என வாழ்நாள் முழுவதும் ஆசிரியர்களின் நினைவு இருந்து கொண்டிருக்கும்.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான், அந்த மகத்தான காரியம் செய்யும் நீங்கள் மனம் வேதனையுற்றதால் பாதிக்கப்படுவது கல்வி மட்டுமே. கொடுக்க கொடுக்க குறையாதது கல்வி செல்வமே...
அதை கொடுத்தால் மட்டுமே பெற முடியும். தானாக தேடிக் கொள்ள முடியாது. இது எல்லாம் அந்த பட்டிகாட்டான்களுக்கும், புறம்போக்குகளுக்கும் புரியாது.
அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் மேசையை தட்டுவதும், காலில் விழுவதும் மட்டுமே. காசுக்கு மாரடிக்கும் அந்த கைக்கூலிகளுக்கு தெரியாது ஆசிரியர் தொழில் எவ்வளவு உன்னதமானதென்று....
காலம் பதில் சொல்லும், காத்திருங்கள்!!!
இந்த பதிவு புண்பட்ட ஆசிரிய நெஞ்சங்களுக்கு மருந்தாக இருந்தால் மகிழ்ச்சியுறுவேன்.
நன்றி!!!








