இயலாமல் தவிக்கும்நிலை தமிழகத்தில் உருவாகிவிட்டது.மாணவன் சூழ்நிலையறிந்து கற்பித்த காலம் மலையேறிவிட்டது.
அவன் சமூகம் சார்ந்தவன் அவனைச்சுற்றி ஏராளமான நிகழ்வுகள்
நடக்கின்றன.உறவுகள் திருமணம்,திருவிழா,
காதுகுத்து,இறப்பு,
பிறப்பு,மேலும் அவனது
உடல்நிலை,மனநிலை
இதையெல்லாம் உணரக்கூடிய ஒரே ஜீவன் ஆசிரியர்கள்
மட்டுமே.உயிரோடு உறவாடும் பாக்கியம்பெற்றவர்கள்
ஆகவேதான் நம்முன்னோர் சொன்னார் மாதா,பிதா,குரு,
தெய்வம் என்று.அந்த
ஆசிரியரின் கண்ணைக்கட்டிவிட்டு
காட்சிநடத்தச்சொல்வ
தும்,கையைக்கட்டி விட்டு சாப்பிடச்சொல்வதும்
தான் இன்றைய கற்பித்தல் நிகழ்வுகள்
1முதல்8 வரை தேர்ச்சி,
பள்ளிக்கு வரவில்லையென்றால்
பக்குவமாய் சொல்லனும்
மாதம் ஒருமுறை பெ.ஆ.கூட்டம்,ப.மே.குழு
கூட்டம்,ப.மே.வ.கூட்டம்
இதற்கிடையில் NMMS,NTS,TRUST,NAS
EXAM .போட்டிகள் பல
கண்காட்சி,மதுவிலக்கு,எரிசக்தி,போசன்மா,
சாலைப்பாதுகாப்பு,
கலையருவி,
பாசாசங்கம்இப்படி விதவதமான நிகழ்வுகள் நெருக்கினாலும்
நெஞ்சம் தளராத கல்விப்பணியில்100%
பெற்றுக்கொடுக்கும்
பேறுபெற்றவர்கள்
ஆசிரியர்கள்
எல்லா நெருக்கடியிலும்
பெரிய கடி EMIS என்ற
கொசுக்கடி.கல்விஆண்டின் துவக்கம்முதல் இறுதி வரைஇணைபிரி
யாமல் துரத்தும் இன்பச்
சுமை.இதெல்லாம் போக UNIT TEST 1,2,3
முன்அரையாண்டு.
திருப்புதல்தேர்வு,இதற்கான மீளாய்வு.NEET பயிற்சி.எல்லாம் போக
Team visit,கேட்க்கும். தபால்களைக் கொடுக்கவேநேரமில்லை .பள்ளி வேளைகளில் எத்தனை
பயிற்சிகள்,சாலாசித்தி
Attendance,சத்துணவு வருகை,பிளாஸ்டிக்
ஒழிப்பு ,கழிப்பறைப்பயன்பாடு,டெங்குஒழிப்புணர்வு பேரணி இவைகள் மத்தியிலும்
இன்முகம்காட்டிப்
பணியாற்றும் இனியவர்கள் எங்கள் ஆசிரியர்கள்
இனி வரும் தேர்தல்
பணியும் எங்கள் தலையில்.எத்தனை
சுமைகளை சுமத்தினாலும்
கல்விப்பணியை மேம்படச் செய்வோம்
மேதினிலே உயர்ந்தே
நிற்போம்
வாழ்க ஆசிரியப்பணி
வளர்க கல்விப்பணி








