இவற்றில், 4 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட பாடத்திட்டம், நடைமுறையில் உள்ளது. இது, சர்வதேச அளவில், தரமான இன்ஜினியரிங் மாணவர்களை உருவாக்க உதவுவதாக, தொழில் துறை நிறுவனங்கள் தரப்பில், கருத்து தெரிவிக்கப்பட்டது.
'ஆன்லைன்' முறை படிப்பிலும், கிரெடிட் மதிப் பெண் பெறலாம்.அதேபோல், ஒரு ஆண்டில், ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால், அந்த பாடத்தின், 'இன்டர்னல்' மதிப்பெண்ணும் நீக்கப்படும். அவர்கள், ஒரு ஆண்டு கழித்து, மீண்டும் அந்த பாடத்தை, புதிதாக படித்து, எழுத வேண்டும்.
இதற்காக, அந்த குறிப்பிட்ட பாட வகுப்பிலும், மாணவர்கள் பங்கேற்கலாம். மதிப்பெண் பட்டிய லில், தேர்ச்சி பெறாத பாடம், 'அரியர்' என, குறிப் பிடப்படாது.இந்த தேர்வு முறை, இரண்டு ஆண்டு களாக அமலில் உள்ள நிலையில், திடீரென சில கல்லுாரி மாணவர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அவர்கள், நேற்று அண்ணா பல்கலை முன் கூடி, போராட்டம் நடத்தினர். 'இந்த திட்டத் தால், பட்டப் படிப்பை முடிக்க, கூடுதல் காலம் தேவைப்படுகிறது. எனவே, புதிய பாடத் திட்டத்தை கைவிட வேண்டும்' என, தெரிவித்தனர்.
அண்ணா பல்கலையின் பொறுப்பு பதிவாளர், குமார் அளித்த பேட்டி:மாணவர்களில் நலனுக்காக,
இந்த திட்டத்தை, மாணவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. இது, தேசிய, சர்வதேச அளவில் ஏற்கப்பட்ட பாடத்திட்டம். மாணவர் களின் கோரிக்கைகள் குறித்து ஆராய, ஆய்வு குழு அமைக்கப்படும். இதற்கு, 10 நாட்களுக்கு மேல் தேவைப்படும்.இணைப்பு கல்லுாரிகள், மாணவர்களுக்கு, புதிய பாடத் திட்டத்தை விளக்கி, புரிய வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.









