சோசலிச கொள்கையை அரசியலைமைப்புச்சட்டத்தில் கொண்ட நாட்டில் சோசலிச உரிமைகள் நசுக்கப்படும் போது இந்த சுய அறிவு இல்லாத சமூகம் நசுக்குபவர்களை கைதட்டி பாராட்டுகிறது.
அரசு ஊழியர்களின் ஊதிய நிர்ணயம் ஏனோதானோ என நிர்ணயம் செய்யப்பட்டதல்ல.... உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் பொருளாதார வல்லுநர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டு விலைவாசி புள்ளி விபரங்களை சேகரித்து நிர்ணயம் செய்ய பட்டது. இந்த குறைந்தபட்ச ஊதியம் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பொருந்தும். ஏன் இந்த குறைந்த பட்ச ஊதியத்தினை தனியார் நிறுவனம் அளிக்க அரசு ஆவண செய்யவில்லை என கேட்பதை விடுத்து ஏன் குறைந்தபட்ச ஊதியத்தினை அரசு ஊழியர்கள் போராடுகிறார்கள், அதைவிட குறைந்த அளவிற்கு நாங்கள் வேலை செய்கிறோம் என அறிவிலி சமூகம் கேட்கிறது..
பிரான்ஸ் நாட்டில் அரசு பணி ஏலத்தின் மூலமும், வாரிசு உரிமையின் மூலமும்தான் ஒரு காலத்தில் நிரப்பப்பட்டன. அமெரிக்காவில் வெற்றி பெற்ற அரசியல் கட்சியின் தொண்டர்களை கொண்டு நிரப்பப்பட்டன.
அரசு ஊழியர்களான நாங்கள், யாருடைய உரிமையும் தட்டி பறிக்கவில்லை. ஓட்டப்பந்தயத்தில் முதலில் ஜெயித்தால் தங்க பதக்கமும் சான்றிதழும் தருகிறேன் என்று கூறுகிறார்கள். ஜெயித்தபிறகு அலுமினியத்தில் தருகிறார்கள். வாங்க மறுத்து உரிமையினை கேட்டால் தோற்றவனை காட்டி அவன் வாங்க தயாராக உள்ளான் என கூறுவீர்களா?
நான் போட்டி தேர்வு எழுதும் போது அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்கள் 900. எழுதியர்வர்களின் எண்ணிக்கை 2 இலட்சம். கடைசி மதிப்பெண் பெற்றவனை தேர்ந்தெடுத்து நியமித்திருந்தால் அற்ப கூலிக்கு வேலை செய்ய தயாராக இருந்திருப்பான். அரசுக்கும் 71℅ நிதிச்சுமை ஏற்பட்டிருக்காது.
ஏன் நமது முதலமைச்சர் இந்த சட்டத்திருத்ததினை பரிசீலிக்கக்கூடாது.
இந்த நாட்டின் சாபக்கேடான தந்திரங்களில் இதுவும் ஒன்று. அரை வயிற்றுக் கஞ்சியில் உழைக்கும் வர்க்கத்தினை வை. கால் வயிறு கூடுதலாக கேட்டால், அரை வயிற்றுக்கும் கேடு விளைவி... அடிப்படை தேவைக்களுக்கும் அல்லாட வை.
ஜல்லிகட்டிற்கான மெரினா போராட்டத்தில் சங்கிகளின் துணையோடு கலவர பூமியாக மாற்றி அடக்குமுறை மூலம் போராட்டத்தினை ஒடுக்கினர்.
தூத்துகுடி போராட்டத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மற்றும் சங்கிகள் துணையுடன் காவல் துறை மூலம் கலவரம் ஏற்படுத்தபட்டது. அதன் மூலம் அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தது இந்த அரசு.
விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாப்பதாக போலியாக உறுதியளிக்கும் இந்த அரசு, தமிழகத்திற்கு உணவளிக்கும் டெல்டா மாவட்டங்களை பாதுகாப்பதற்கு பதிலாக ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஒப்பந்தமிடும் சங்கிகளின் மத்திய அரசுடன் இணைந்து அத்திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுகிறது.
மக்கள் எதிர்த்து கேள்வி கேட்டால் தேசவிரோதிகள் நக்சலைட்டுகள் எனும் பட்டம் வேறு. மட்டுமல்ல, தங்களின் கையாலாகாதனத்தை மறைப்பதற்கு முந்தைய அரசின் மீது பழி சுமத்தி விட்டு தப்பிக்க பார்ப்பது. மேலும், முன் அரசின் திட்டங்களை தானே நடைமுறை படுத்துகிறோம். எதுவாயினும் முந்தைய அரசினை கேளுங்கள் என்று கூறி, பிற கட்சிகளின் மீது பழி சுமத்துவதுதான் இவர்களின் பிரதான வேலையாக உள்ளது.
நாங்கள் கேட்கிறோம், முந்தைய அரசு செய்த தவறுகளை திருத்துவதற்காகத்தானே
அறிவார்ந்த தமிழ் சமூகமே, மக்களே தயாராக இருங்கள், அற்ப கூலிக்கு அல்லாட...தனியார் நிறுவனத்திலும்.... அரசு நிறுவனத்திலும்....
சோசலிச நாட்டில் சோசலிச உரிமைகளை நசுக்கிய எனது அரசிற்கும் எனது மக்களுக்கும் எனது நன்றிக்கடன் உரித்தாகுக...🙏🏻
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
ஊழ்வினை உறுத்தும்.
எங்களை உயர்ந்தோர் போற்றுவர்








