Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
அரசு கலைக்கல்லூரிகளில் உள்ள காலியிடம் நிரப்ப எடுத்த நடவடிக்கைகள் என்ன?: அறிக்கை தாக்கல் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவு :
அரசு கலைக்கல்லூரிகளில் உள்ள காலியிடம் நிரப்ப எடுத்த நடவடிக்கைகள் என்ன?: அறிக்கை தாக்கல் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவு :
தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில்
காலியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை
தாக்கல் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ஐகோர்ட் கிளை
உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த கார்த்திக், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல்
செய்த பொதுநல மனு: தமிழகத்தில் சுமார் 91 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்
செயல்பட்டு வருகின்றன.
இதில் 50 அரசு கல்லூரிகள் கிராமப்புற பகுதிகளில் செயல்பட்டு
வருகிறது. தற்போது இக்கல்லூரிகளில் 2,500 விரிவுரையாளர் காலியிடங்கள்
நிரப்பப்படாமல் உள்ளன.
இந்த காலியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 2015ம் ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
மேலும், கவுரவ விரிவுரையாளராக நியமனம் செய்யப்பட்ட 3,544
பேரில் யூஜிசி நிர்ணயம் செய்த கல்வித்தகுதிகளை பெற்றிருப்பது சுமார் 1,330
விரிவுரையாளர்கள் மட்டுமே என்று ஒரு சர்வே வெளியிடப்பட்டுள்ளது. முறையான
கல்வித்தகுதி இல்லாதவர்கள், மாணவர்களுக்கு சரியான கல்வியை கற்றுத்தர
முடியாது.
கடந்த 2018ம் ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்
264 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால்
விரிவுரையாளர்கள் பணியிடங்கள் அதிகரித்துள்ளது.
ஆனால் இதுநாள் வரை எந்த காலியிடங்களையும் அரசு நிரப்பவில்லை.
எனவே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள விரிவுரையாளர்
காலியிடங்களை உடனடியாக யூஜிசி விதிமுறைகளை பின்பற்றி நிரப்ப அரசுக்கு
உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர்,
அரசு கலைக்கல்லூரிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்ட
நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த அறிக்கையை, தாக்கல் செய்ய ஆசிரியர்
தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை பிப்.19ம் தேதிக்கு
ஒத்திவைத்தனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








