கள்ளக்குறிச்சி: 'கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக்கி, புதிய மாவட்டம்
உருவாக்கப்படும்' என்ற முதல்வரின் அறிவிப்பால், 15 ஆண்டு கால கனவு, நனவான
மகிழ்ச்சியில், அப்பகுதி மக்கள் உள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், தமிழகத்தின்
முதல் பெரிய மாவட்டமாகும். 1993ல் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில்
இருந்து, விழுப்புரம் ராமசாமி படையாட்சியார் மாவட்டம் என உருவாக்கப்பட்டு,
பின், விழுப்புரம் மாவட்டம் என, பெயர் மாற்றப்பட்டது.தமிழகத்தின் பெரிய
மாவட்டமான விழுப்புரம், 7,194 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு
உடையது.மாவட்டத்தில், 2011ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 17
லட்சத்து, 40 ஆயிரத்து, 819 ஆண்கள் மற்றும் 17 லட்சத்து, 18 ஆயிரத்து, 54
பெண்கள் என, மொத்தம், 34, லட்சத்து, 58 ஆயிரத்து, 873 மக்கள்
வசிக்கின்றனர்.
பரந்து விரிந்த இம்மாவட்ட எல்லையில் உள்ள கள்ளக்குறிச்சி,
சங்கராபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு
வர, 100 கி.மீ.,க்கு மேல் பயணிக்க வேண்டியுள்ளது.இதனால், 'விழுப்புரம்
மாவட்டத்தை பிரித்து, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டம்
அமைக்க வேண்டும்' என அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் என, பல்வேறு
தரப்பிலும், 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், முதல்வர்
பழனிசாமி, 'விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, கள்ளக்குறிச்சியை
தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டம் அமைக்கப்படும்' என, சட்டசபையில்,
நேற்று முன்தினம் அறிவித்தார்.கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார மக்கள்,
குறிப்பாக, மலைவாழ் மக்கள், 15 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியதில், பெரும்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு
வழங்கியும் கொண்டாடினர்.10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |







