தினக்கூலி அடிமை வேலை தான் என்கிறது அரசாணை 56
அதை எதிர்த்து போராடினால்....
சம்பளம் போதலையா என்கிறது சமுதாயம்.
அரசாணை 100 , 101 இன் படி ஆரம்பப் பள்ளிகளையும், உயர்நிலைப்பள்ளி களையும் இணைப்பு என்ற பெயரில் சிதைப்பு,
L.K.G & U.K.G என்ற பெயரில் அங்கன்வாடி புதைப்பு,
எதிர்த்து போராடினால்....
சம்பளம் போதலையா என்கிறது சமுதாயம்
நான் சேமித்து வைத்த பணத்தை எங்கே என்று கேட்டால்,
புதிய முறையில் ( CPS ) சூதாடி ஜெயித்து தருகிறேன் ( பங்குசந்தையில் போட்டு) என்கிறது அரசு....
வேண்டாம் ,
பழைய முறைப்படியே (GPF) பணத்தை கொடு என்றால்....
சம்பளம் போதலையா என்கிறது சமுதாயம்.
பசியே இல்லாத என் அண்ணன்மார்களுக்கு (ச.ம.உ க்கள், நீதிபதிகள், ஆட்சியர்கள் )
21 மாத தவணை பாக்கியை ஊட்டிவிடுகிறது அரசு ...
பசியுடன் இருக்கும் எனக்கு தர வேண்டிய 21 மாத தவணையை திருப்பி கேட்டால் ...
சம்பளம் போதலையா என்கிறது சமுதாயம்.
ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு ( இடைநிலை ஆசிரியர்கள் 2009 க்கு முன், பின்)
ஒரு கண்ணில் வெண்ணையும்,
ஒரு கண்ணில் சுண்ணாம்பும், வைத்து ஏன் பார்க்கிறாய் என்று கேட்டால் ....
சம்பளம் போதலையா என்கிறது சமுதாயம்.
தினமும் அடுப்படியில் வெந்து,
ஆயுளை பணையம் வைத்து எனக்கு சோறு போட்டு வளர்த்து வந்த, சத்துணவு ஆயாவுக்கு ஊதியத்தை வரையறை செய் என்று கேட்டால் ...
உனக்கு சம்பளம் போதலையா என்கிறது சமுதாயம்.
கண்ணிருந்தும் குருடராய்... காதிருந்தும் செவிடராய்...
வாய் மட்டும் நீளமாய் கொண்ட ...
தமிழ் குடி மக்களே எழுத்தறிவித்தவன் கண்ணீர் விட்டால் எதிர்கால சமுதாயம் அறிவுக் குருடர்கள் ஆகிவிடும் என்பதை மறந்துவிடாதே.
இவன்
உங்களில் ஒருவன்








