நாங்களும் போர்க்குணத்துடன்தான் களத்தில் இறங்கினோம்!
போராட்ட நாட்களுக்கு சம்பளம் இல்லை என்றார்கள்,
நாங்கள் பரவாயில்லை என்றோம்.
17பி என்றார்கள் , நாங்கள் அசரவில்லை.
கைது என்றார்கள் செய்து கொள் என்றோம்.
சஸ்பென்ட், டிஸ்மிஸ் என்பதெல்லாம் எங்கள் முன்னோர்கள் பார்த்துவிட்டார்கள் என்றோம்.
தற்காலிக ஆசிரியர் நியமனம் என்பதும் பூச்சாண்டி வேலை என்பதையும் அனைவரும் அறிந்திருந்தனர்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு மாறுபட்ட ஒரு ஆயுதத்தை அரசு பயன்படுத்தியது.
அதுதான் காலிப்பணியிடம், மாறுதல் என்ற புதுவிதமான ஆயுதம்.
இதை எவ்வாறு எதிர்கொள்வது என்ற பயிற்சி எங்களுக்கு இல்லாததால் போர்க்களத்தில் தடுமாறிவிட்டோம். மனவலிமை சற்றே குறைந்தது.
கூடுதலாக உடல்வலிமையை குறைக்கும் விதத்தில் இரவு நெடுநேரம் கழித்து விடுதலை செய்தது.
அங்கன்வாடி நியமனத்திற்கு தடை என்ற நீதிமன்றத் தீர்ப்பும் தற்காலிகமாக மனநிம்மதி வழங்கி எங்களை ஓய்வு மனநிலைக்கு கொண்டு சென்றுவிட்டது.
இத்தனை சூழலிலும் உறுதியுடன் போர்களத்திற்கு வந்த சொற்ப போராளிகள் மீது அரசு வழக்கு தொடுத்து சிறையில் அடைத்து, பின் மீண்டும் போராடக்கூடாது என்ற நிபந்தனையில் ஜாமீன் வழங்கியது, போராட்டத்தை முடித்து வைத்த செயலாக அமைந்துவிட்டது.
எங்களுடை போர்த்திறமைக் குறைவும் , கள வியூக தெளிவின்மையும், மனவலிமைக் குறைவும் தான் எங்களைத் தோற்கடுத்துவிட்டது.
இதனால் எங்களை நம்பி கடைசி வரையிலும் களத்தில் நின்ற ஜாக்டோ_ஜியோவை தனியாக களத்தில் விட்டுவிட்டு களத்தை விட்டு ஓடிவந்துவிட்டோம்.
ஆனாலும் எங்கள் மனதில் போர்க்குணம் இன்னும் எரிமலையாய் குமுறிக்கொண்டுதான் இருக்கிறது என்ற ஒரு உண்மை மட்டும் உனக்கு ஆறுதல் தரும் செய்தியாய் இருக்கும்.
எங்கள் தேவைக்கு உன்னை அழைத்து , உன்னை தனியாக விட்டுவிட்டு புறமுதுகு காட்டி ஓடி வந்த எங்களை கருனையுள்ளத்துடன் மன்னித்துவிடு.
நாங்கள் மீண்டும் முழு பயிற்சி பெற்றுவிட்டு களம் இறங்க தயாரான பின் அழைக்கிறோம். எங்கள் தவறை மன்னித்து, மீண்டும் எங்களது உரிமைக்கான போருக்கு தலைமை தாங்க நிச்சயம் வரவேண்டும்.
18 முறை படையெடுத்தாவது எங்கள் ஓய்வூதிய உரிமைகளை மீட்காமல் விடமாட்டோம்.
அதுவரையிலும் ஓய்வெடு.
போய்..வா...
*ஜாக்டோ_ ஜியோ வாழ்க!*
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
திருவைகுண்டம் வட்டாரம்,
தூத்துக்குடி மாவட்டம்








