2009 ஆண்டு பணியில் சேர்ந்து தேர்வு நிலைக்கு காத்திருக்கும் ஆசிரியர்களுக்குத் தேவையான படிவங்களின் தொகுப்பு(NO WATERMARK)

பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை கோரும் கருத்துருவில் இணைக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்
- தலைமை ஆசிரியரின் முகப்புக் கடிதம்.
- தேர்வு நிலை சிறப்பு நிலை விண்ணப்ப படிவம்.
- பட்டதாரி ஆசிரியராக அல்லது இடைநிலை ஆசிரியர் நியமனம் பெற்ற ஆணை நகல்.
- பட்டதாரி ஆசிரியர் அல்லது இடைநிலை ஆசிரியர்பணி ஏற்றநாள் பதிவேட்டில் பதிந்து பக்கத்தின் நகல்.
- பணிப் பதிவேட்டில் முதல் பக்க நகல் -புகைப்படத்துடன்.
- பட்டதாரி ஆசிரியர்அல்லது இடைநிலை ஆசிரியர் பணி வரன்முறை ஆணை நகல்.
- பணிவரன்முறை பதிவேட்டில் பதியப்பட்ட பக்கத்தில் நகல்.
- தகுதிகாண் பருவம் முடிக்கப்பட்ட ஆணை நகல்.
- தகுதிகாண் பருவம் பதிவேட்டில் பதியப்பட பக்கத்தில் நகல்.
- தேர்வுநிலை பெற்று பின் பணிப் பதிவேட்டில் பதியப்பட பக்கத்தில் நகல்.