இந்த ரத்தத்தின் பெயர் ஹிமோலிம்ஃப் ஆகும். இந்த ஹிமோலிம்ஃப் எனும் ரத்தமானது ஹீமோசயானின் என்ற வேதிப்பொருளால் இப்பிராணிகளின் மேல் சருமத்தின் மூலம் பெறப்படும் பிராண வாயுவைக் கொண்டு சுத்தம்
செய்யப்படுகிறது. இந்த ரத்த ஓட்ட முறையானது "திறந்த முறை" எனப்படும்.
பூச்சிகளின் உடலில் உள்ள வெற்றிடங்கள் மிக மெல்லிய திசுக்களால் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு ரத்த நாளம் மட்டும் இவற்றின் மூளையிலிருந்து வயிற்றுப் பகுதிவரை செல்கிறது. இதுவே இதயம் போல செயலாற்றுகிறது. இந்த நாளமும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வால்வுகளின்றி, இதனுள் உள்ள திசுக்களால் சுருங்கியும் விரிந்தும் செயலாற்றி ரத்த சுழற்சிக்குக் காரணமாகிறது.
ஒருமுறை தலையை நோக்கிச் செலுத்தப்பட்ட ரத்தமானது, பூச்சிகளின் மேல் தோலில் படும் பிராணவாயுவினால் ஹீமோ சயானால் சுத்தமாகி, மறுபடியும் வயிற்றை வந்த அடைகிறது. இவ்வாறாக இந்த இதயம் செயலாற்றுகிறது.
பிராணவாயு குறைந்து காணப்படும் இடங்களில் வாழும் பூச்சிகளுக்கு ஹீமோகுளோபின் போன்ற வேதிப் பொருள் பிராண வாயுவை திசுக்களால் செலுத்துகிறது.








