"No shame and no confusion!" - Doctor on the left handmade ``அவமானமும் இல்லை... குழப்பமும் தேவையில்லை!'' - இடது கைப்பழக்கம் குறித்து மருத்துவர் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Monday 18 March 2019

"No shame and no confusion!" - Doctor on the left handmade ``அவமானமும் இல்லை... குழப்பமும் தேவையில்லை!'' - இடது கைப்பழக்கம் குறித்து மருத்துவர் :

குழந்தைகளில் சிலருக்கு இடtதுகைப் பழக்கம் இருக்கும். இடதுகைப் பழக்கத்தை மாற்றுவதற்குப் பெற்றோர்கள் முயல்வார்கள். நம்மைப் பொறுத்தவரையில் இடது கையில் எந்த விஷயங்கள் செய்தாலும் அதை வித்தியாசமாகப் பார்க்கும் பழக்கம் இருக்கிறது. 
இடது கை பழக்கம் உள்ள குழந்தைகளை வலது கைகளைப் பயன்படுத்தக் கட்டாயப்படுத்துவது சரியா என்பதைத் தெரிந்துகொள்வதற்காகக் குழந்தைகள் நல மருத்துவர் கண்ணனிடம் பேசினோம். நம்முடைய மூளையில் பெருமூளை, சிறுமூளை மற்றும் மெடுல்லா ஆப்லங்கட்டா என மூன்று பகுதிகள் இருக்கும். இதில், பெருமூளையில் வலது மற்றும் இடது என இரண்டு பாகங்கள் இருக்கின்றன. இந்தப் பாகங்கள்தான் நம்முடைய உடலிலுள்ள அனைத்து செல்களையும் கட்டுப்படுத்துகின்றன.
வலது பக்க மூளை இடது புறத்திலுள்ள உடலையும், இடது பக்க மூளை வலது புற உடலையும் கட்டுப்படுத்துகின்றன. இடது பக்க மூளையின் அதிக செயல்பாட்டின் காரணமாகதான் நாம் வலது கையை அதிகமாகப் பயன்படுத்துகிறோம். சிலருக்கு, வலது பக்க மூளையின் அதிக செயல்பாட்டின் காரணமாக இடதுகைப் பழக்கம் ஏற்படுகிறது. இது மிகப்பெரிய பிரச்னையெல்லாம் கிடையாது. குழந்தைகளுடைய ஒன்றரை வயதிலிருந்தே அவர்கள் இடக்கை பழக்கத்தை பழகுவதற்கான அறிகுறிகள் தெரிந்துவிடும். மூன்று வயதிலிருந்து அவர்கள் இடதுகையைப் பயன்படுத்த பழகிவிடுவார்கள். பெற்றோர்களுக்கு இடக்கைப் பழக்கம் இருந்தால் குழந்தைக்கும் இடக்கைப் பழக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. 
பெரும்பாலும் தாய்க்கு இடது கை பயன்படுத்தும் பழக்கம் இருந்தால் குழந்தையும் இடது கை பழக்கத்துடன் தான் இருக்கும். இடக்கையைப் பயன்படுத்தும் குழந்தைகள் வலது கையை பயன்படுத்தும் குழந்தைகளைவிட நினைவாற்றலில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். அதே போன்று இசை, ஓவியம் எனக் கலைகளின் மீது அதிக அக்கறையோடும் இருப்பார்கள். அவர்களுக்குக் கற்பனைத்திறன் அதிகமாக இருக்கும். பெற்றோர்கள் இடது கையைப் பயன்படுத்தினால் அவமானம் என்று கருதி அதை மாற்ற முயல்வார்கள். வலது கையில் எல்லா விஷயங்களையும் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவார்கள். 
இது போன்ற செயல்கள் குழந்தைகளுடைய வளர்ச்சியைப் பாதிக்கும். கையெழுத்து மாறுவதுடன் அவர்களுடைய செயல்பாடுகளிலும் மாற்றம் ஏற்பட ஆரம்பிக்கும். அவர்கள் இரண்டு கைகளிலும் எழுதத் தொடங்கிவிடுவார்கள். அதனால், அது போன்ற விஷயங்களைப் பெற்றோர்கள் செய்யாமல் இருப்பதே நல்லது. மகாத்மா காந்தி, சச்சின் டெண்டுல்கர், நிவின் பாலி என நாம் வியந்து பார்த்த மனிதர்கள் பலரும் இடது கை பழக்கம் உடையவர்கள்தான்! அவ்வளவு ஏன், பிரதமர் மோடிகூட இடது கை பழக்கம் உடையவர்தானே... இடது கை பழக்கம் குறைங்குற எண்ணத்தை எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகள் மனதில் பதிய வைக்காதீர்கள்! 
அது அவர்களை மனரீதியாகப் பாதிக்கும். இடது கை பழக்கம் உள்ளவர்கள் எல்லா விஷயங்களையும் இடது கையில்தான் செய்வார்கள் என்றில்லை. சிலர் எழுதும்போது மட்டும் இடக்கையைப் பயன்படுத்துவார்கள். சிலர், சாப்பிடும்போதும், பொருள்களை எடுக்கும்போதும், எழுதும்போதும் இடது கையை பயன்படுத்துவார்கள். நண்பர்களுடன் கை குலுக்கும்போதும், கைதட்டும் போதும் சின்ன குழப்பமும் தயக்கமும் அவர்களுக்கு ஏற்படும். வளர, வளர அவையனைத்துமே சரியாகிவிடும். 
இடது கை பழக்கம் அவமானம் கிடையாது. அது மிகவும் இயல்பான ஒன்றுதான். அதற்காகக் குழப்பம் அடையத் தேவையில்லை. இடது கை பழக்கம் உடையவர்களை வித்தியாசமாகப் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. அது குறையில்லை என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளுதல் அவசியம். இடது கை பழக்கம் தவறில்லை! 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H