
>
இளம் வாக்காளர் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை தேர்தல் ஆணையம்
வெளியிட்டுள்ளது.
இதில் 18 முதல் 19 வயது உடைய வாக்களர்களின் எண்ணிக்கை 1.50 கோடி பேர்
எனவும், இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 1.66 சதவீதம் எனவும் தேர்தல்
ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த புள்ளிவிவர பட்டியலில் அதிக இளம் வாக்களர்களை கொண்டு மேற்கு வங்கம்
முதலிடத்தில் உள்ளது. மேற்கு வங்கத்தில் 20.10 லட்சம் இளம் வாக்காளர்கள்
முதல் முறையாக வாக்களிக்க இருக்கின்றனர்.
அடுத்ததாக உத்தரபிரதேசத்தில் 16.70 லட்சம் இளம் வாக்காளர்கள் முதல் முறையாக
வாக்களிக்க இருக்கின்றனர். மூன்றாவது இடத்தில் மத்திய பிரதேசம் 13.60
லட்சம் இளம் வாக்காளர்களைக்கொண்டுள்ளது.
அடுத்தடுத்த இடங்களில் ராஜஸ்தான் 12.80 லட்சம், மஹாராஷ்ட்ரா 11.90 லட்சம்,
தமிழ்நாடு 8.90 லட்சம், ஆந்திரா 5.30 லட்சம் ஆகிய மாநிலங்கள்
இருக்கின்றது.
கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒப்பிடுகையில் இந்த தேர்தலில்
இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 8.40 கோடி அதிகரித்து உள்ளதாக தேர்தல்
ஆணையம் கூறியுள்ளது.