பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் TET தேர்வுக்கு விண்ணப்பிக்க
முடியாமல் பரிதவிப்பு. கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் பணி
நியமனத்திற்கு TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில்
கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
இதன்படி 2012 முதல் இதுவரை தமிழகத்தில் 4 முறை TET தேர்வு
நடைபெற்றுள்ளது. இதுவரையிலான TET தேர்வுகளில் B.Ed ., தேர்ச்சி பெற்ற
அனைவருமே எழுத அனுமதிக்கப்பட்டனர்.அதற்கென UG மற்றும் B.Ed ஆகியவற்றில்
குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்நிலையில் 2019
ம்ஆண்டுக்கான TET தேர்வு அறிவிக்கப்பட்டு ONLINE வழியாக விண்ணப்பப்பதிவு
நடைபெறுகிறது.ஆனால் இம்முறை TET தேர்வில் Paper 2 க்கு விண்ணப்பிக்க UGல்
OC பிரிவினர் 50% மும் , இதர இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்கள் ( BC /MBC /
SC / ST ) அனைவரும் 45% முன் பெற்றிருக்க வேண்டும் என TRB புதிய
விதிமுறைவகுத்துள்ளது. இதில் என்ன கொடுமை என்றால் B.ed படிக்க UG யில்
SC/ST க்கு -40%, MBC/DNC-43% தகுதியில் B.ed படிக்க அனுமதிக்கப்பட்டனர்
ஆனால் தற்போது இம்முறையால் 40% முதல் 45% வரை UG யில் மதிப்பெண் பெற்றோர்
தற்போது நடக்கும் TET தேர்வை எழுத முடியாது.இது சமூக நீதிக்கு எதிரானது