பொள்ளாச்சி:தொடர் விடுமுறை முடிந்து ஊர் திரும்பும் மக்கள் வசதிக்காக, அரசு
போக்குவரத்து கழகம் சார்பில், 86 கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.பொள்ளாச்சி
சுற்றுப்பகுதி மற்றும் வால்பாறையை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் பணி
நிமித்தமாக வெளியூர்களில் தங்கியுள்ளனர்.
கடந்த, 17ம் தேதி மகாவீர் ஜெயந்தி, 18ம் தேதி லோக்சபா தேர்தல், 19ம் தேதி புனித வெள்ளி, சனி, ஞாயிறு என ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், வெளியூர்களில் பணியாற்றும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு வந்திருந்தனர். அவர்கள் விடுமுறை முடிந்து நேற்று ஊர் திரும்பினர்.
இதனால், பஸ்களில் நேற்று
காலை முதலே கூட்ட நெரிசல் அதிகம் காணப்பட்டது. இந்த கூட்ட நெரிசலை
சமாளிக்க, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள்
இயக்கப்பட்டன. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட வெளியூர்களுக்கு,
80 பஸ்களும், வால்பாறைக்கு ஆறு பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட்டன.கடந்த, 17ம் தேதி மகாவீர் ஜெயந்தி, 18ம் தேதி லோக்சபா தேர்தல், 19ம் தேதி புனித வெள்ளி, சனி, ஞாயிறு என ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், வெளியூர்களில் பணியாற்றும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு வந்திருந்தனர். அவர்கள் விடுமுறை முடிந்து நேற்று ஊர் திரும்பினர்.
அதிகாரிகள் கூறுகையில், 'பயணிகள் கூட்டத்தை பொறுத்து, பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். கூட்டம் குறையும் வரை கூடுதல் பஸ் இயக்கம் நீடிக்கும்,' என்றனர்.பஸ்களை போலவே பொள்ளாச்சி வழித்தடத்தில் மதுரை, சென்னைக்கு இயங்கும் ரயில்களிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமிருந்தது.