மாதவரம் : லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில்,
சத்துணவு அமைப்பாளர்கள் உட்பட அரசு ஊழியர்களுக்கு, தபால் ஓட்டு சீட்டுகள்,
இதுவரை கிடைக்காததால், ஓட்டளிக்கும் வாய்ப்பை இழந்து விடுவோம் என்ற
சந்தேகத்தில், அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை, திருவள்ளூர்,
ஸ்ரீபெரும்புதுார், லோக்சபா தொகுதிகளில், பள்ளி ஆசிரியர்கள், சத்துணவு
அமைப்பாளர் உட்பட, அரசு ஊழியர்கள் தேர்தல் பணியாற்றினர். அவர்கள், ஏப்.,
17ம் தேதி முதல், 23ம் தேதி வரை, தபால் ஓட்டு போடலாம். அதற்கான, ஓட்டு
பதிவு செய்யும், ஓட்டு சீட்டுகள், வீட்டு முகவரிக்கு வந்து விடும்.
அதில், அவர்கள், தங்களது ஓட்டை பதிவு செய்து, அந்தந்த பகுதி தாலுகா அலுவலகங்களில் உள்ள தபால் ஓட்டு பெட்டியில் போட வேண்டும்.ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில், இதுவரை குறைந்த பட்ச எண்ணிக்கையிலான அரசு ஊழியர்களுக்கு மட்டுமே, தபால் மூலம், ஓட்டு சீட்டுகள் வந்துஉள்ளன.ஏராளமானவர்களுக்கு, இன்னும் அவை கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.