வாட்ஸ்அப் பீட்டா ஆப் டவுன்லோடு செய்யும் அனைவருக்கும் இந்த அம்சம் வழங்கப்படுகிறது. புதிய பீட்டா செயலியில் பெரிய மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
முன்னதாக பார்க்கப்பட்ட வெகேஷன் மோடிற்கு புதிய இக்னோர் ஆர்ச்சிவ்டு சாட்ஸ் (Ignore archived chats) அம்சம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் புதிய மெசேஞ்கள் வரும்போது குறுந்தகவல்கள் தானாக அன்-ஆர்ச்சிவ் ஆவதை தடுக்கும்.
புதிய இக்னோர் ஆர்ச்சிவ்டு சாட்ஸ் அம்சத்தை இயக்க செட்டிங்ஸ் — நோட்டிஃபிகேஷன்ஸ் — இக்னோர் ஆர்ச்சிவ்டு சாட்ஸ் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். எனினும், இந்த அம்சம் தற்சமயம் உருவாக்கப்படுகிறது. இந்த அம்சத்தை உடனடியாக பயன்படுத்த புதிய பீட்டா செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.








