ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம்
வழங்க வேண்டும்' என, பள்ளி கல்வித்துறைக்கு, ஆசிரியர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 2010 ஆகஸ்ட்,
23க்கு பின், ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், ஆசிரியர் தகுதிக்கான,
'டெட்' தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த சட்டத்தை, தமிழக அரசும் அமல்படுத்தியுள்ளது.இதன்படி, எட்டாம் வகுப்பு
வரை பாடம் எடுக்கும் பணியில் சேரும், பட்டதாரி மற்றும் இடைநிலை
ஆசிரியர்கள், தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், மார்ச், 31க்கு பின் பணியில் நீடிக்க முடியாது என, அரசு உத்தரவிட்டுள்ளது.இதன் முதற்கட்டமாக, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும், 1,500 ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால், அவர்களுக்கு, பள்ளி கல்வித்துறை, நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இதுகுறித்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.அரசின் இந்த உத்தரவு, அரசு பள்ளிகளுக்கு மட்டுமின்றி, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்பதால், தனியார் பள்ளி ஆசிரியர்களும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...