பாரம்பரிய மருத்துவப் படிப்புக ளைப் பொருத்தவரை, அரும்பாக் கம் அறிஞர் அண்ணா அரசு பாரம்ப ரிய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரியில் 60 இடங்க ளும், யுனானி மருத்துவக் கல்லூரி யில் 60 இடங்களும், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும் உள்ளன.
அதேபோன்று திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சித்தமருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள், மதுரை மாவட்டம் திரு மங்கலத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 50 இடங்கள், நாகர்கோவில், கோட்டாறில் உள்ள ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இடங்கள் என 6 அரசு கல்லூரிகளில் மொத்தம் 390 இடங்கள் உள்ளன. இதேபோல 27 தனியார் கல்லூரி களில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,200 இடங்கள் உள்ளன. அவற்றில் யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மட்டும் நிகழாண்டில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அதற்கான விண் ணப்ப விநியோகம் வரும் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.