நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் படிப்பதற்காக தனது மகன், மகளை நீதிபதி சேர்த்துள்ளார்.
நாமக்கல் குற்றவியல் நடுவர் மன்ற (எண் 1) நீதிபதி வடிவேல், சில மாதங்களுக்கு முன் இடமாறுதல் மூலம் இங்கு பணியாற்றி வருகிறார். நாமக்கல்லில் வசித்து வரும் இவர், திருச்செங்கோடு சாலையில் உள்ள வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, திங்கள்கிழமை காலையில் தனது மகன் மற்றும் மகள் ஆகியோருடன் சென்றார். இதைத் தொடர்ந்து, பள்ளித் தலைமை ஆசிரியர் பி.சாந்தியிடம், தனது குழந்தைகளுக்கு பள்ளியில் சேர்க்கை வழங்குமாறு கோரி விண்ணப்பத்தை அளித்தார். இதையடுத்து, நீதிபதியின் மகளை எட்டாவது வகுப்பிலும், மகனை ஆறாம் வகுப்பிலும் சேர்க்கும் நடவடிக்கையை தலைமை ஆசிரியை மேற்கொண்டார். இதற்கு, முன்னர் திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட துறையூரில் பணியாற்றியபோதும், தனது குழந்தைகளை அரசுப் பள்ளியிலேயே படிக்க வைத்ததாக நீதிபதி வடிவேல் தெரிவித்தார்.