2018ல் பணி மாறுதல் பெற்றும் ஓராண்டாக விடுவிக்கப்படாத
ஆசிரியர்களை ஜூன் 1ம் தேதிக்குள் விடுவிக்க வேண்டும் என்று
பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 1ம் தேதிக்குள் தற்போது பணிபுரியும் பள்ளிகளில் இருந்து விடுபட்டு
ஜூன் 6க்குள் புதிய பணியிடத்தில் சேரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இடைநிலை
ஆசிரியர்களை ஒரு ஆண்டு கழித்து பணிமாறுதலில் செல்ல பள்ளிக்கல்வித்துறை
அனுமதி வழங்கி உள்ளது. மாநிலம் முழுவதும் ஈராசிரியர் பள்ளிகளில்
பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 2018ல் பணி மாறுதல் வழங்கப்பட்டது.
பணி மாறுதல் பெற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரிந்த பள்ளிகளிலேயே
தொடர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
பணி மாறுதலில் செல்லும் ஆசிரியர் விவரம், புதிதாக சேரும் பள்ளியின்
விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மாவட்ட
முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர்
உத்தரவிட்டுள்ளார்.