💠💠கேரள ஆயுதப்படையில் சவுமியா என்பவர் பயிற்சி காவலராக பணியாற்றி வந்தார். தனது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் தனது 3 குழந்தைகளுடன் சவுமியா வசித்து வந்துள்ளார்.
💠💠 இந்நிலையில் ஆயுதப்படை பயிற்றுநர் அஜாஸ் என்பவருக்கும் சவுமியாவுக்கும் நட்பாகி நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
💠💠 இதனையடுத்து தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி அஜாஸ் சவுமியாவை வற்புறுத்தியுள்ளார்.
💠💠இதற்கு சவுமியா மறுப்பு தெரிவித்து அஜாஸ் உடனான தொடர்பை குறைத்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அஜாஸ், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பயிற்சி காவலர் சவுமியா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் சவுமியா துடிதுடித்து இறந்தார்.
💠💠 அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காயமடைந்த அஜாஸை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
💠💠இந்நிலையில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் தான் சவுமியாவை தீ வைத்து கொளுத்தியதாக அஜாஸ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.