புதுடில்லி: புதிய மாற்றங்கள்.. வாட்ஸ் அப் செயலியில் சில புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பொதுவாக வாட்ஸ் அப்பில் பெண்கள் தங்கள் சொந்த புகைப்படத்தை வைப்பதில் சிக்கல் எழுகிறது. ஏனெனில் விஷமிகள் அவற்றை தரவிறக்கம் செய்து, எடிட்டிங், மார்பிங் மூலம் பெண்களை மிரட்ட பயன்படுத்துகின்றனர். மேலும், தனிப்பட்ட சில புகைப்படங்களை ஆண்களும் கூட பாதுகாக்க முடிவதில்லை.
வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். பீட்டா பதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின் படி பயனர்கள் இனி மற்றவர்களின் புரோபைல் புகைப்படத்தை தரவிறக்கம் செய்ய முடியாது. இதுதவிர வாட்ஸ்அப் போட்டோ ஆல்ப தோற்றத்தை உருமாற்றம் செய்யும் பணி நடைபெறுகிறது.
இதுமட்டுமின்றி, வாய்ஸ் மெசேஜ்கள், வாய்ஸ் கால் உள்ளிட்ட அம்சங்களிலும் வாட்ஸ்அப் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. எதிர்கால அப்டேட்களில் இன்டராக்டிவ் பட்டன்களை சேர்க்கவும் டெவலப்பர்கள் பணியாற்றி வருகின்றனர்.