*காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்* 0⃣3⃣-0⃣7⃣-1⃣9⃣ - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


*காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்* 0⃣3⃣-0⃣7⃣-1⃣9⃣

இன்றைய திருக்குறள்*
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு  அணியல்ல மற்றுப் பிற.
*மு.வ உரை* வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.
*கருணாநிதி  உரை* அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.


*சாலமன் பாப்பையா உரை* தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா.
✡✡✡✡✡✡✡✡
*பொன்மொழி*
வெற்றியாளர் ஒருபோதும் இழப்பதில்லை. ஒன்று வெல்கிறார்கள் அல்லது கற்கிறார்கள்! 
🎋🌿🍀🎋🌿🍀
*இன்றைய மூலிகை*
*பொன்னாங்கண்ணி*
வயல்வெளிகளில் கொடுப்பை என்ற பெயரில் விளையும் மூலிகைதான் பொன்னாங்கன்னி கீரை. 'பொன் ஆகும் காண் நீ' என்பதன் சுருக்கமே பொன்னாங்கண்ணி என்பதாகும். இதை கீரையாக சமைத்து உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை உரி பெற்று கூர்மையாகும்.
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
*Important  Words - Ailments & Body Conditions*
Leucoderma வெண் குஷ்டம்

Breath மூச்சு
Swelling வீக்கம்
Voice குரல்
Healthy ஆரோக்கியமான
✍✍✍✍✍✍✍✍
*பொது அறிவு*
1. கடற்கரை மணலைச் சுத்தம் செய்யும் கருவியின் பெயர் என்ன?
*பீச் கோம்பர்*
2. நமது ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை தசைகள் உள்ளன?
*ஆறு தசைகள்*
3.நாய்களே இல்லாத ஊர் எது?
*சிங்கப்பூர்*
4. எந்தத் தட்ப வெப்பத்திலும் உறையாத தனிமம் எது?
*ஹீலியம்*
5.வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன?
*ஆறு மூலைகள்*

✒✒✒✒✒✒✒✒
*தொடரும் தொடர்பும்*
*திருமூலர்*
“உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்”
“யான் பெற்ற பேறு பெறுக இவ் வையகம்”
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு"
ஒன்றே குலம் ஒருவனே தேவன்  
“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்” 
🧬🧬🧬🧬🧬🧬🧬🧬
*Today's Grammar*
*Prepositions of Time / நேர முன்னிடைச் சொற்கள்*
இந்த "நேர முன்னிடைச்சொற்கள்" நேரத்தை குறித்துக்காட்ட பயன்படுவைகள் என்றாலும், நேரத்துடன் தொடர்புடைய கிழமை, மாதம், ஆண்டு, காலம் போன்றவற்றை குறிக்கவும் பயன்படும். இவற்றை "கால முன்னிடைச்சொற்கள்" என்றும் அழைப்பர்.

"at" முன்னிடைச்சொல் பயன்பாடுகள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தை (a specific time) குறிப்பிடும் முன்னிடைச்சொல்லாக "at" பயன்படும்.
at 3 o'clock at 9:00am at noon at dinnertime at bedtime at sunrise at sunset at the moment at night at midnight at daybreak at the weekend at the same time at present at Chritmas/Easter
"in" முன்னிடைச்சொல் பயன்பாடுகள்

"in" மாதங்களை (Months) குறிப்பிட முன்னிடைச்சொல்லாகப் பயன்படும்.
in January in February
"in" பருவங்களை (Season) குறிப்பிடும் முன்னிடைச் சொல்லாகப் பயன்படும்.
in Spring in Summer in Winter in Autumn
இவற்றை சுட்டிடைச்சொல் "the" இட்டும் பயன்படுத்தலாம். ஆனால் "autumn" என்பதற்கு மட்டும் சுட்டிடைச்சொல் "the" பயன்படாது என்பதை நினைவில் கொள்ளவும்.
in the spring (in the springtime) in the summer (in the summertime) in the winter (in the wintertime) in autumn (in autumntime)
"in" ஆண்டுகளை (Years) குறிப்பிட முன்னிடைச்சொல்லாகப் பயன்படும்.
in 2008 in 1990 in 2009
அதேவேளை in last year, in next year, in every year என்று குறிப்பிடுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். இவற்றைக் குறிப்பிடும் போது முன்னிடைச்சொல் இன்றியே பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
last year next year every year
"in" ஒரு நாளின் நேரங்களை (Times of the Day) குறிப்பிட முன்னிடைச்சொல்லாகப் பயன்படும்.
in the morning in the afternoon in the evening
at night 
அதேவேளை "இரவில்" என்று குறிப்பிடும் பொழுது "at night" என்றே குறிப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (in night / in the night என்று குறிப்பதில்லை.)
மேலும் சில "in" முன்னிடைச்சொல்லின் பயன்பாடுகள்.
in the next century in the Ice Age in the past in a few days
"on" முன்னிடைச்சொல் பயன்பாடுகள்
திகதியை (Dates) குறிப்பிட முன்னிடைச்சொல்லாக "on" பயன்படும். அதேவேளை திகதியை தவிர்த்து மாதத்தையோ, ஆண்டையோ, அல்லது மாதத்துடன் ஆண்டை மட்டும் குறிப்பிடுவதாயின் "in" பயன்படுத்த வேண்டும் என்பதை மறவாதீர்கள்.
on January 3 on 25 Dec. 2010 on 15th Augest 2009
கிழமை நாட்களை (Days of week) குறிப்பிட முன்னிடைச் சொல்லாக "on" பயன்படும்.
on Sunday on Monday on Tuesday
on Saturday morning on Sunday afternoon on Monday evening
விடுமுறை நாட்கள் மற்றும் சிறப்பு நாட்களை (Holydays and Special days) குறிப்பிட முன்னிடைச்சொல் "on" பயன்படும்.
on Mother's day on Velentine's day on Christmas Eve/Day on the first day of the 
📫📫📫📫📫📫📫📫
*அறிவோம் இலக்கணம்*
*இலக்கணக்குறிப்பு*
ஒழுக்கம் – தொழிற்பெயர்
காக்க – வியங்கோள் வினைமுற்று
பரிந்து, தெரிந்து – வினையெச்சம்
இழிந்த பிறப்பு – பெயரெச்சம்
கொளல் – அல் ஈற்றுத் தொழிற்பெயர்
🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
*இன்றைய கதை*
*வாய்மையே வெல்லும்*
 ஒரு ஊரில் கஞ்சன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கஞ்சமாக செலவு செய்வான். யாருக்கும் உதவி செய்யாதவன் அவனுக்கு ஒரு நாள் அவன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வேப்பமரத்திற்கு அடியில் புதையல் இருப்பது போல கனவு வந்தது. 

 தூக்கத்திலிருந்து கஞ்சன் எழுந்து புதையலை எடுக்க நினைத்தான். பகலில் சென்றால் பிறருக்கு தெரிந்துவிடும் என்று நினைத்து இரவில் புதையலை எடுக்க சென்றான். அப்போது அங்கிருந்த நல்ல பாம்பு ஒன்று அவனைக் கடித்துவிட்டது. விஷம் ஏறியது. விஷக்கடி மந்திரவாதியிடம் ஓடினான் கஞ்சன். அவர் தன்னிடம் வரும் நோயாளிக்கு மந்திரம் சொல்லியே நோயைக் குணமாக்குவார். 

 பூரான் கடிக்கு - 5 ரூபாய், தேள் கடிக்கு - 10 ரூபாய் பாம்பு கடிக்கு - 25 ரூபாய் 

  உனக்கு என்ன கடித்தது என்றார் மந்திரவாதி. அந்த நேரத்தில் கஞ்சன் எந்த கடியானாலும் ஒரே மந்திரம் தானே சொல்லப் போகிறார் என்று நினைத்து பாம்பு கடித்தது என்று சொல்லி அதிக காசு கொடுக்க வேண்டும் என்று கஞ்சமாக யோசித்து பூரான் கடித்து விட்டது என்று பொய் கூறினான். 

 மந்திரவாதி பூரான்கடி மந்திரத்தை சொல்ல பயன் இல்லை. மீண்டும் வைத்தியரே எனக்கு தேள் கடித்து விட்டது என்றான். மந்திரவாதி தேள்கடி மந்திரத்தை சொன்னார் இப்போதும் எந்த பயனும் இல்லை. 

 பயந்து போன கஞ்சன் மெதுவாக பா பா பாம்பு கடித்தது என்றான். அவன் சொல்லி முடிப்பதற்குள் விஷம் தலைக்கு ஏறி இறந்து விட்டான். 

*நீதி* அளவுக்கு மீறின கஞ்சம் உயிரினை எடுக்கும். 
🧾🧾🧾🧾🧾🧾🧾🧾
*செய்திச் சுருக்கம்*
🔮 அத்தி வரதரை தரிசிக்க விழாக்கோலம் பூண்டது காஞ்சி நகரம்.
🔮 தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
🔮 கல்வி மானிய கோரிக்கையில் 8  முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு   வழங்கும் உதவித் தொகை உயர்த்த தமிழக அரசு முடிவு.
🔮 தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என்ற முடிவில் தமிழக அரசு உறுதியாக உள்ளது: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.
🔮ரோகித் சர்மாவின் அபார சதம், ரிஷப் பந்தின் அரைசதத்தால் வங்காள தேசத்திற்கு 315 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.
🍀🌿🎋🍀🌿🎋
*.தொகுப்பு* T.தென்னரசு,  இ.ஆசிரியர், தமிழ்நாடு டிஜிட்டல் டீம், திருவள்ளூர் மாவட்டம்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H