ஜாக்டோ ஜியோ வின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று (07.07. 2019) ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ ஜியோ வின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில உயர் மட்டக் குழுவில் அங்கம் வகிக்கும் சங்கங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும் ஜாக்டோ ஜியோ வின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரைக் கொண்ட தலைவர்கள் மட்டும் (சுமார் 1000 பேர்) கலந்து கொள்ளக்கூடிய ஒரு நாள் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற இருக்கிறது. இன்றைய தினம் பத்திரிக்கையாளர் சந்திப்பு உண்ணாவிரதம் நடைபெறும் வளாகத்தில் பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது அனைத்து ஊடக நண்பர்களும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்
கு.தியாகராஜன் . மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் ஜாக்டோ-ஜியோ.