
ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் கண்டிப்பாக காணவேண்டிய ஒரு திரைப்படம் ராட்சசி...
பள்ளிகள்தான் எதிர் கால சமூகத்தினைக் கட்டமைக்கிறது.
குறிப்பாக அரசு பள்ளிகள். அவற்றில் நிலவும் சிக்கல்களின் ஒரு பகுதியினை பட்டவர்த்தனமாக தோலுரித்து காட்டியுள்ளது இப்படம்.
வசனங்கள் ஒவ்வொன்றும் கூர்மை... நம்மை சிந்திக்க வைக்கிறது.திரையரங்கு முழுவதும் கைதட்டல் விழுகிறது...
அவற்றுள் சில...
ஊழலும், லஞ்சமும் தப்புன்னு சொல்லி ஒருதலைமுறையைக் கூட உருவாக்கலை...
சுதந்திரம் என்பது இஷ்டத்துக்கு பண்றதில்ல...எது சரியோ அதை பண்றது!
அப்பாக்கள் கொடுத்ததை விட அதிகமா சேர்த்தாத்தான் நீ ஹீரோ...இல்லைன்னா நீ ஜீரோ...
கோயில் கும்பாபிசேகத்துக்கு கொடுக்குற நீங்க ஏன் கவர்மெண்ட் ஸ்கூலுக்கு கொடுக்க மாட்டுறீங்க. கொடுத்து பாருங்க. கோயில் கர்ப்பகிரகம் மட்டும் இல்ல...ஸ்கூல் கக்கூஸ் கூட மணக்கும்!..
பிரைவேட் ஸ்கூலுக்கு படிக்குறதுக்காக அனுப்பல...கெளரவத்துக்காக அனுப்புறாங்க.
அதிக மார்க் எடுத்தவன் எல்லாம் அறிவாளின்னு அர்த்தம் இல்ல... நல்ல மனப்பாடம் பண்றவன்னு அர்த்தம்...
சம்பளம் வாங்கிக் கொண்டு பாடம் எடுக்காமல் இருப்பதும் ஊழல்தான்...
இதுபோல் பல வசனங்கள் உண்மைக்கு மிக நெருக்கமாக நின்று இப்படம் பேசுகிறது....
வசனம் 'கற்க கசடற' என்ற நூலில் ஆசிரியர் பாரதி தம்பி...
சினிமாத்தனங்கள் இருந்தாலும் இப்படம் நம் அனைவரையும் சிந்திக்க வைப்பதால் கொண்டாடப்பட வேண்டியவள் இந்த ராட்சசி...👆