🍃வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு ஏற்கெனவே வருமானவரிச் சலுகை அளித்துள்ள நிலையில், மார்ச் 2020-ம் ஆண்டுவரை கூடுதலாக ரூ.1.50 லட்சம் வரை விலக்கு அளித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
🍃2-வது முறையாக பதவி ஏற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு தனது முதலாவது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது முதலாவது பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியது.
🍃வீட்டுக்கடன் பெற்று வட்டி செலுத்துபவர்களுக்கு வருமானவரிச் சலுகையாக தற்போது ரூ.1.50 லட்சம் அளிக்கப்பட்டு வருகிறது. இனி 2020ம் ஆண்டு மார்ச் வரை வீட்டுக்கடன் பெற்றவர்களுக்கு கூடுதலாக ரூ.1.50 லட்சம் வருமானவரிச் சலுகை அளிக்கப்படும்.
🍃மின்னனு வாகனங்கள் வாங்க கடன் பெற்றவர்களுக்கு வட்டி செலுத்தும்போது, அதற்கு வருமானவரியில் ரூ.1.50 லட்சம் விலக்கு அளிக்கப்படும்.
🍃அரசு வங்கிகளை வலுப்படுத்தும் நோக்கிலும், கடன் வழங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் கூடுதலாக ரூ.70ஆயிரம் கோடி முதலீடு வழங்கப்படும்.
🍃வங்கிகளின் வாராக்கடன் அளவு கடந்த 2019-20ம் ஆண்டில் ரூ.ஒரு லட்சம் கோடியாகக் குறையும். கடந்த 4ஆண்டுகளில் வங்கிகள், திவால் அறிவிப்பு செய்த நிறுவனங்கள், நொடித்துப் போனதாக கூறிய நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு வழங்கிய கடனில் ரூ.4 லட்சம் கோடியை மீட்டுள்ளன இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.