🌹👉பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
👉பள்ளிகளின் நிர்வாக விபரங்கள், மாணவர், ஆசிரியர் விபரங்கள் போன்றவை, பள்ளி மேலாண்மை இணையதளமான, எமிஸில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
👉இயக்குனர் அலுவலகங்களி
👉பள்ளிகளின் நிர்வாக விபரங்கள், மாணவர், ஆசிரியர் விபரங்கள் போன்றவை, பள்ளி மேலாண்மை இணையதளமான, எமிஸில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
👉இயக்குனர் அலுவலகங்களி
👉இந்த விபரங்களுக்காக, ஆசிரியர்களை நேரில் அழைத்து, கூட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படாது.
👉அதேநேரம், நிர்வாக காரணங்களுக்காக கூட்டம் நடத்த வேண்டியிருந்தால், மாலை நேரம் அல்லது சனிக்கிழமைகளில் நடத்தலாம்.
👉அதனால், பள்ளி வேலை நேரம் பாதிக்கப்படாது.
👉மேலும், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், விபரங்களை கேட்கவும், அளிக்கவும், பள்ளி வேலை நேரங்களில், கல்வி அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
👉தேவைப்படும் விபரங்களை, இ - மெயில் வழியே அனுப்பினால், பள்ளியின் வேலை நேரம் பாதிக்கப்படாது.
👉ஆசிரியர்களும் பள்ளி வேலை நேரங்களில், வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
👉இவற்றை எல்லாம் கண்டிப்புடன் பின்பற்றும்படி, ஆசிரியர்களை முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
🌹🌹ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
🌹👉ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்றும், வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
👉பட்ஜெட்டை தொடர்ந்து பெட்ரோல், டீசல், தங்கம் ஆகியவற்றின் விலை உயருகிறது.
👉மின்சார கார்களின் விலை குறைகிறது. 👉ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது
👉மாத சம்பளம் பெறுபவர்களை பொறுத்தமட்டில் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
👉அதாவது வருமான வரி செலுத்தத்தக்க வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்தால் வரி கிடையாது.
👉அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை, அதிகபட்சமாக ரூ.45 லட்சம் வரை மதிப்பிலான வீடு வாங்குபவர்களுக்கு வங்கி கடனுக்கான வட்டியில் கூடுதலாக ரூ.1½ லட்சம் கழித்துக்கொள்ளலாம்.
👉தற்போது இந்த சலுகை ரூ.2 லட்சமாக உள்ளது.
🌹கூடுதல் வரி🌹
👉நடுத்தர வர்க்கத்தினரின் வருமான வரி விகிதங்களில், அடுக்குகளில் மாற்றம் இல்லை என அறிவித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கூடுதலாக வருமானம் சம்பாதிப்பவர்கள் கூடுதலாக வரி பங்களிப்பு செய்ய வேண்டும் என்று கூறினார்.
👉அந்த வகையில் ஆண்டு வருமானம் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை உள்ள தனி நபர்கள் 3 சதவீதம் கூடுதல் வரியும், ரூ.5 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள தனி நபர்கள் 7 சதவீதம் கூடுதல் வரியும் செலுத்த வேண்டும்.
👉வருமான வரி கணக்கு தாக்கலுக்கு வருமான வரி நிரந்தர கணக்கு எண் (பான்) இல்லாத பட்சத்தில், ஆதார் எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம்.
🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
🌹🌹ஜூலை 8ல் மருத்துவ கலந்தாய்வு : இன்று தரவரிசைப்பட்டியல் வெளியீடு
🌹👉தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 8ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
👉நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
👉தமிழக நீட் தேர்வை உடனடியாக அமல்படுத்த முடியாத சூழல் உள்ளதாக தெரிவித்ததால் ஓராண்டுக்கு மட்டும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்கப்பட்டது.
👉2017ம் ஆண்டு பிப் 1ம் தேதி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி நிறைவேற்றப்பட்ட இரு சட்ட மசோதாக்களுக்கு மத்திய அரசு இதுவரை குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்றுத்தரவில்லை.
👉மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
👉இந்த ஆண்டு யோகா மற்றும் இயற்கை மருத்துவம் நீங்கலாக, பிற ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று கூறப்படுகிறது.
👉கடந்த 3 ஆண்டுகளாக நீட் மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
👉இந்த ஆண்டு நாடு முழுவதும் நீட் தேர்வு மே 5ம் தேதி நடந்தது.
👉14,10,755 பேர் நீட் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 1,23,078 பேர் தேர்வு எழுதினர். அதில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
👉தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பித்தல் ஜூன் 7ம் தேதி தொடங்கி 20ம் தேதி முடிந்தது.
👉அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 39,013 இடங்களும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 29,007 என மொத்தம் 68,020 பேர் விண்ணப்பித்துள்னளர்.
👉ஜூலை 8ம் தேதி சிறப்புப்பிரிவு இடங்களுக்கும், ஜூலை 9ம் தேதி முதல் பொதுப்பிரிவு இடங்களுக்கும் கலந்தாய்வு தொடங்க உள்ளது.