தமிழை மொழிப் பாடமாக பயிலாமல் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி
வரும் ஆசிரியர்களின் விவரங்களை அனுப்பி வைக்க அனைத்து
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை
உத்தரவிட்டுள்ளது.
தமிழை ஒரு மொழிப் பாடமாக பயிலாமல் பிற மொழிகளில் பயின்று பட்டம் பெற்று
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள்,
டி.என்.பி.எஸ்.சி.யால் நடத்தப்படும் தமிழ்மொழி 2-ஆம் நிலைத் தேர்வை எழுதி
தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும்.
பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளுக்குள் இந்த தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.
இந்த நிலையில் தமிழ்மொழி 2-ஆம் நிலைத் தேர்வை எழுதி தேர்ச்சி பெறாமல்,
தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்களை
உடனடியாக அனுப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.







