5ம் வகுப்பு பாட புத்தகத்தில் பருவ காலம் பற்றிய தகவல் தவறாக அச்சிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு பாடநூல் தயாரிப்பதற்காக குழு அமைத்து அதனை மேற்பார்வையிடவும் குழுவினரை நியமித்து பாடநூல்களை தயாரித்து அச்சிட்டு வழங்கியுள்ளது. இதில் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு பருவம் 1, தொகுதி 2 பாடபுத்தகத்தில் பருவ நிலை பற்றி தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.பருவகாலங்கள் பற்றி குறிப்பிடும்போது மழைக்காலம் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை, முன்பனிக்காலம் ஜூன் முதல் செப்டம்பர் வரை, பின்பனிக்காலம் அக்டோபர் முதல் நவம்பர் வரை என குறிப்பிடப்பட்டிருக்கிறது.








