
இன்று காலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் 2017 - 18 கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு அடுத்த 3 மாதங்களில் கணினி வழங்கப்படும் எனவும், தற்போது படித்து வரும் பதினோராம் வகுப்பு மற்றும் 11ம் & 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு கியூ ஆர் கோட் பயன்படுத்தி பாடங்களை படிக்க வேண்டி இருப்பதால் உடனடியாக கணினி வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் தற்போது உள்ள புதிய பாட திட்டத்தை முழுமையாக படித்து முடிக்க 240 நாட்கள் தேவைப்படும் எனவும் அதனை பள்ளி செயல்படும் 220 நாட்களுக்குள்ளாக பயின்று முடிக்க இந்த கணினிகள் அவர்களுக்கு பயன்படும் எனவும் தெரிவித்தார்.