ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் விழிப்புடன் செயல்படுவோம்.👀👀
***********
பொதுவாக நடைபெற இருந்த ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு கால அட்டவணை ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறக் கூடிய வேலூர் நாடாளுமன்றத் தேர்தலால் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்ககத்தைப் பொறுத்த வரையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடைய ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு பிறகு காலாண்டு விடுமுறையில் நடைபெறும். தொடக்கக்கல்வித்துறையைப் பொருத்தவரையில் வேலூர் மாவட்டத்தில் முற்றிலும் கலந்தாய்வு நிறுத்தப்பட்டுள்ளது. மற்றபடி தொடக்க கல்வித்துறையில் ஏற்கனவே உள்ள கால அட்டவணைப்படி திட்டமிட்டபடி நடைபெறும். அதாவது 9ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
***********
பொதுவாக நடைபெற இருந்த ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு கால அட்டவணை ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறக் கூடிய வேலூர் நாடாளுமன்றத் தேர்தலால் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்ககத்தைப் பொறுத்த வரையில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடைய ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு பிறகு காலாண்டு விடுமுறையில் நடைபெறும். தொடக்கக்கல்வித்துறையைப் பொருத்தவரையில் வேலூர் மாவட்டத்தில் முற்றிலும் கலந்தாய்வு நிறுத்தப்பட்டுள்ளது. மற்றபடி தொடக்க கல்வித்துறையில் ஏற்கனவே உள்ள கால அட்டவணைப்படி திட்டமிட்டபடி நடைபெறும். அதாவது 9ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
பணியிட நிரவலில் விழிப்புணர்வாக இருத்தல் வேண்டும்.. 01.08.2018 இல் மாணவர்கள் எண்ணிக்கை சரியானபடி இருந்து மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் மாதத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தால் உபரி பணியிடமாக அறிவிக்க கூடாது. ஆனால் அதே நேரத்தில் 01.08.2018 இல் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்து தற்போது மாணவர்கள் எண்ணிக்கை கூடுதலாக இருந்தால் அதனை கணக்கில் எடுத்துக்கொண்டு கூடுதல் பணியிடம் என்று நிரவல் செய்யத் தேவையில்லை. முன்னுதாரணமாக 01.08.2018 இல் 58 மாணவர்கள் இருந்தால் இரண்டு ஆசிரியர்கள்தான் பணியாற்ற வேண்டும் என்பார்கள். ஆனால் அதே பள்ளியில் கலந்தாய்வு நடைபெறுகிற சமயத்தில் 61 மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்தால் 01.08.2018 இன் படி பணியிடம் எடுக்கத் தேவையில்லை. 01.08.2018 இல் 61 மாணவர்கள் இருந்து கலந்தாய்வில் 58, 59 மாணவர்கள் இருந்தால் உபரி பணியிடம் என எடுக்கத் தேவையில்லை. காரணம் 31 07 2019 வரை மாணவர்களை சேர்ப்பதற்கான காலக்கெடு உள்ளது. இயக்கப் பொறுப்பாளர்கள் அனைவரும் கவனமுடன் இருந்து செயல்படவும். சில ஒன்றியங்களில் இந்த மாதத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்து தான் கூடுதல் பணியிட நிரவல் நடைபெறும் என்று சம்பந்தமே இல்லாமல் தெரிவித்து வருகிறார்களாம். தொடக்கக்கல்வி இயக்குனரைப் பொருத்தவரையில் 26.06.2019 அன்று வெளியிட்ட செயல்முறை கடிதத்தில் நாளது தேதியில் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் உபரி ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு கூடுதல் தேவை உள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்தல் வேண்டும் என தெரிவித்துள்ளார்கள். நாளது தேதி என்பது 01.08.2019 இல் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை தான் குறிக்கும். எந்த அலுவலராவது குழப்பம் ஏற்படுத்தினால் உடனடியாக இயக்குனர் அல்லது இணை இயக்குனர் அவர்களை தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள். இல்லையெனில் மாநில அமைப்பை தொடர்பு கொள்ளுங்கள். ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிநிரவல் செய்யும் போது பழைய அரசாணைப்படி அந்த ஒன்றியத்திலுள்ள பணியில் இளையவர்கள் மட்டுமே வெளி ஒன்றியங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்தார்கள். அரசாணை எண் 217 ன்படி அந்த ஒன்றியத்தில் உபரி பணியிடம் எந்தப் பள்ளியில் இருக்கிறதோ அந்தப் பள்ளியின் இளையோர் எவரோ அவர்தான் ஒன்றியம் விட்டு ஒன்றியம் செல்ல வேண்டும் எனத் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். பதவி உயர்வு, காலிப்பணியிடம் வரும்போது அவர் முன்னுரிமை எதுவும் பாதிக்காது.
சென்றாண்டு 2018 இல் வெளி ஒன்றியத்திற்கு பணி மாறுதலில் சென்றவர்கள் 2019 ஆம் ஆண்டில் அவர் பணியாற்றிய ஒன்றியத்தில் காலிப்பணியிடம் இருப்பின் அவருக்கு முன்னுரிமை அளித்து மாறுதல் வாய்ப்பு அளிக்க வேண்டும்.
சென்ற ஆண்டு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர் நிர்வாக காரணத்தினால் பணியில் இளையவராக இருந்ததால் அவரை பதவி இறக்கம் செய்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக அல்லது பட்டதாரி ஆசிரியராக பணி இறக்கம் செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார். அவர் தற்போது நடைபெறக்கூடிய பதவி உயர்வு கலந்தாய்வில் பழைய அரசாணைப்படியும் மனித நேய உணர்வுடன் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 217,218 அரசாணையின்படி அவர்களுக்கு முன்னுரிமை வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஏதேனும் ஒரு பணியிடத்தில் வாய்ப்பு வழங்கப்படும்.
பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவலை பொறுத்த வரையில் ஒரு நடுநிலைப்பள்ளியில் 75, 80 மாணவர்கள் எண்ணிக்கை இருந்தாலும் மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் ஒரு தலைமை ஆசிரியர் ஆக நான்கு பேர் பணியாற்றலாம்.தலைமை ஆசிரியர் பாடத்தையும், உபரி ஆசிரியர் பாடத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தேவையில்லை. வட்டார கல்வி அலுவலர்களைப் பொருத்தவரையில் மூன்றாண்டு முடியாதவர்களுக்கு நிர்வாக மாறுதல் அளிக்கப்பட உள்ளது.
அங்கன்வாடி பள்ளியில் பணிபுரிபவர்கள் உபரி பணியிடத்திலிருந்து மாற்றம் செய்யப்பட்டார்கள். தற்போது மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அவர்களை மீண்டும் அதே பள்ளிக்கு பணியில் அமர்த்தலாம் என்று கேட்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் பள்ளிக்கல்வித் துறையை பொறுத்த வரையில் 2,381 பள்ளிகளுக்கு நியமனம் செய்தவர்களை எக்காரணத்தைக் கொண்டும் மாறுதல் செய்ய முடியாது. இவர்களுக்கு பதவி உயர்வுவரின் பேனலில் சேர்க்கப்படுவார்கள்.
நீதிமன்றம் சென்றவர்களைத் தவிர மற்றவர்களுக்கு மூன்றாண்டு விதித்தளர்வு எதுவும் இல்லை. whatsapp செய்திகளை நம்ப வேண்டாம்.
110 விதியின் கீழ் அறிவிப்பு வருமா? என்றெல்லாம் ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எதைப்பற்றியும் கவலைப்படாத அரசு உங்கள் ஏக்கப்பார்வைக்கு கவலைப்பட முன்வருமா? 8 லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு மறியல் போராட்டம் தொடர்ச்சியாக நடத்தியபோது அழைத்துப் பேசாத அரசு, போராட்டத்தை அடக்க நினைத்த அரசு தான் இப்போதும் ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த அரசே தொடர்ந்தாலும் இதற்கு ஒரு விடிவு காலத்தை நம்மால் ஏற்படுத்தி பெற முடியும் என்ற நம்பிக்கை இன்னமும் நமக்கு இருந்து வருகிறது. ஆனால் நம்மைப் பொறுத்தவரையில் நாவடக்கமும், பதிவடக்கமும் எல்லையைத் தாண்டாமல் இருந்தால் அதுவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் செய்யும் நன்மை என்பதை நாம் உணர்வோமாக!
நமது ஆசிரியர் இயக்க குரல் இதழ் 12 பக்க அரசாணைகளுடன் கூடிய விபரத்துடன் ஆறாம் தேதி வெளிவருகிறது. பத்திரமாக பாதுகாத்து செயல்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.
நம்பிக்கையுடன், அண்ணன், வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர்.