♦♦நாளை மறுநாள் முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த பொதுப்பிரிவு
மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு துவங்க உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க
உள்ள மாணவர்கள் கவனிக்க வேண்டியவை குறித்து விளக்குகிறது இந்த செய்தி
தொகுப்பு*
*♦♦பொறியியல் கலந்தாய்வு என்றாலே மாணவர்களோடு சேர்ந்து பெற்றோர்களும் அண்ணா
பல்கலைக்கழகத்தில் திரண்டு வந்து பல்வேறு இன்னல்களை சந்திக்கும் நிலையே
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்து வந்தது*
*♦♦இதைப் போக்கும் வகையில் கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் கலந்தாய்வு முறையை அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டும் அதே முறையில் கலந்தாய்வு நடக்க உள்ளது*
*♦♦மிகவும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதால் ஆன்லைன் கலந்தாய்வு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள், தயாராவது எப்படி என்பது தொடர்பாக கல்வியாளர்கள் சில அறிவுரைகளை வழங்கி உள்ளனர்*
*♦♦ஒரு மாணவர் எத்தனை கல்லூரிகள் மற்றும் எத்தனை பாடப்பிரிவுகளை வேண்டுமானாலும் விருப்பப் பட்டியலில் கொடுக்கலாம் என்பது ஆன்லைன் முறையின் சிறப்பு அம்சம்*
*♦♦அதேபோல ஒரே கல்லூரியில் வெவ்வேறு பாடப்பிரிவுகளை படிக்க விரும்பினாலும் அதற்கு ஏற்ற வகையில் முன்னுரிமை அடிப்படையில் விருப்பப் பட்டியலில் கொடுக்க வேண்டும்*