மரமும்-மனமும்
ஆள் வளர்ந்த
அளவுக்கு
மனம் வளரா நிலையில் தான் நாம் ஒவ்வொருவரும்
இருக்கிறோம்.
நல்ல மனம் இல்லாதவர்களின் வாயிற் கதவுகள் எப்பொழுதும் மூடியே இருக்கும்..!
மலர் மலர்ந்த பின்னர் தான் பூக்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறும்.
மூடிய மொட்டுகளில்
ஏமாற்றமே மிஞ்சும்.
பிறர் மீது நாம் வைத்துள்ள
மனமும் இதைப் போன்றதே.!
மலராத மனங்களில் கடவுளே விதைத்தாலும் நல்ல விளைச்சலைக் காணாமல் ஏமார்ந்து தான் போகவேண்டும்..!
மனதை எப்போதும் தூய்மையாகவே
வைத்திருங்கள்..!
- ப.ஜார்ஜ்.M.Sc.D.T.Ed
12.07.2019








