
ரவை - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - சிறிதளவு.
நெய் -2 டீஸ்பூன்
உப்பு - ஒரு பின்ச்
செய்முறை
1.முதலில் வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு பொடியாக நறுக்கிய முந்திரி பருப்பை வறுத்து எடுத்து கொண்டு ரவையையும் மிதமான சூட்டில் நிறம் மாறாமல் வறுத்து எடுத்து கொள்ளவும்.
2.அதே வாணலியில் 1/2 ஸ்பூன் நெய் விட்டு 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு வறுத்து வைத்த ரவையை சேர்த்து கலந்து மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும்.
3.ரவை நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஏலக்காய் பொடி , மீதி உள்ள 1/2 ஸ்பூன் நெய் ஊற்றி நன்றாக கலந்து ஆறவிட்டு சர்க்கரை, முந்திரி பருப்பு , தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
4.சுவையான ரவை புட்டு மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிட சுவையாக இருக்கும்.
Shared by M Vijayan








