திண்டுக்கல் மாவட்டத்தில் M.PHIL (எம் ஃபில்) முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இதனால் 300க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இதை கவனத்தில் கொண்டு நம் இயக்கம் பல நாளேடு செய்திகளின் மூலமாகவும் இயக்குனர்,இணை இயக்குனர் ஆகியோருக்கு கொண்டு சென்றது.நமது பேரியியக்கத்தின் சார்பாக நிறுவனர் முனைவர்.அ. மாயவன் அவர்கள் மாநிலத் தலைவர் திரு. சு.பக்தவச்சலம் அவர்கள் மூலம் கோரிக்கைகள் வைக்கப்பட்டு மதிப்புமிகு இயக்குனர் மற்றும் இணை இயக்குநர் JDP மதிப்புமிகு.நாகராஜ முருகன் அவர்கள் முன் கொண்டு செல்லப் பட்டது. அனைத்து அதிகாரங்களும் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு வழங்கப்பட்டு விட்டது எனவும் அதோடு பின்னேற்பு அதிகாரங்கள் உட்பட அவரே வழங்கலாம் எனவும் தெரிவித்தார்கள்.
ஒரு காலகட்டத்தில் இணை இயக்குநர் அவர்கள் திண்டுக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிக்கு கடிதம் அனுப்பி உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கடிதத்தில் தெரிவித்திருந்தார் . அப்படி இருந்தும் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று பாதிக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களைக் கூட்டிக்கொண்டு முதன்மைக் கல்வி அதிகாரியை முற்றுகையிட்டு நடந்தவற்றையெல்லாம் முறையிட்டுக் கூறினோம் .
அதோடு இயக்குனர் கொடுத்த கடிதங்களையும் காண்பித்தோம்.
திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எங்கள் முன் கலந்தாய்வு 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த உடன் 17ஆம் தேதியிலிருந்து 21-ஆம் தேதிக்குள் கண்டிப்பாக விண்ணப்பிக்கப்பட்ட அனைத்து *எம் ஃபில் படிப்புக்கு அனுமதி ஆணை வழங்குவதாக தெரிவித்தார் . நாங்கள் உடனடியாக வழங்க வேண்டும் என வற்புறுத்திய போது MPHIL கவனிக்கும் கண்காணிப்பாளர் மருத்துவ விடுப்பில் இருக்கிறார். நூற்றுக்கணக்கில் விண்ணப்பங்கள் அவரிடம் உள்ளது
இயர் வைஸ் கணக்கிட்டு ஒவ்வொரு கல்வி ஆண்டுடில் பயின்ற ஆசிரியர்களை ஒன்று சேர்த்து ஒரே ஆணையாக வழங்குகிறேன் என்றார்.
அதோடு கூட ஒருவேளை நான் அனுமதி ஆணை 17 - 21க்குள் வழங்காவிட்டால் நான் இந்த மாதம் 30ஆம் தேதி ஓய்வு பெற்று இந்த வளாகம் வழியாக செல்லும்பொழுது கூட என்னை மறித்து கையெழுத்து வாங்கலாம் என உத்தரவாதம் கொடுத்தார். அதன் அடிப்படையில் போராட்டத்தை தவிர்த்து முழு நம்பிக்கையோடு பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுடன் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வளாகத்தை விட்டு வந்தது .
இது தான் உண்மையான வரலாறு
மதிப்புமிகு. முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் இது நாள் வரை பள்ளிக்கல்வித் துறையில் M.PHIL அனுமதி களைத் தவிர செலக்சன் கிரேடு, ஸ்பெஷல் கிரேடு, உண்மைத்தன்மை உள்ளிட்ட பணிUதிவேடுகளை எந்த வித தொய்வுமின்றி மாவட்டத்தில் செய்து கொடுத்துள்ளார். அவருக்கு நம்பேரியியக்கம் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.🙏🙏🙏
மதிப்புமிகு. முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் அளித்த உறுதி மொழியை இந்த மாதம் 17 - 21க்குள் முடித்து அனைத்து ஆசிரியர்களின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களுடன் ஓய்வு பெறுமாறு மாவட்டக் கழகம் உள்ளம் மகிழ்ந்து கேட்டுக் கொள்கிறது.
இவண்
திண்டுக்கல் முனைவர்.மு.முருகேசன்
மாநில செய்தி தொடர்புச் செயலாளர்
க.ஜெகதீஸ்குமார் தலைவர்
லூ செல்மா பிரியதர்ஷன் செயலாளர்
தியாகி.பிரான்சிஸ் பிரிட்டோ பொருளாளர்
சு. நல்லதம்பி .மாவட்ட செ.தொ. செயலர் .








