
நத்தம் அருகில் சாணார்பட்டியில் உள்ள அக்னிச்சிறகுகள் சமூகசேவை மற்றும் இலவச பயிற்சி மைய அறக்கட்டளை சார்பில் 27-07-2019 அன்று நத்தம் கிளை நூலகத்தில் நான்காம்ஆண்டு நினைவு நாள் விழா அனுசரிக்கப்பட்டது. இவ்விழாவில் அரசு பள்ளி மாணவி சிவ அகல்யா தேவி வரவேற்றார். அக்னிச்சிறகுகள் அறக்கட்டளை நிறுவனர் முருகானந்தம், மற்றும் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி தமிழ் ஆசிரியை மகாலெட்சுமி அவர்கள் தலைமையில் அப்துல்கலாம் வரலாற்று சாதனை பற்றி எடுத்து கூறினார்கள்.
நத்தம் கிளை நூலகர் கார்த்திகா மற்றும் ஒடுகம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பரமசிங் முன்னிலை வகித்து இயற்கைச்சூழலை பாதுகாப்பதை பற்றி எடுத்து கூறினார்கள். "கலாம் என்னும் நான்"என்ற தலைப்பில் ஓவியம்., பாட்டு,கவிதை, வினாடி வினா, பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களும் போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் மரம் கன்றுகள் மற்றும் 20 மாணவிகளுக்கு நூலக அட்டை வழங்கப்பட்டது. அப்துல்கலாம் பத்து உறுதிமொழி ஏற்று கொண்டு மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் மாணவி ரோஸ்ணி நன்றி கூறினார். எழுத்தாளர் சங்க பொருப்பாளர்கள் வெள்ளைச்சாமி, நாகேந்திரன், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.